Home சினிமா கோலிவுட் Rajkiran: என்ன பெத்த ராசா ராஜ்கிரணுக்கு இன்று பிறந்தநாள்!

Rajkiran: என்ன பெத்த ராசா ராஜ்கிரணுக்கு இன்று பிறந்தநாள்!

0
526
Rajkiran Birthday

Rajkiran; என்ன பெத்த ராசா ராஜ்கிரணுக்கு இன்று பிறந்தநாள்! ராஜ்கிரண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில், பிறந்தவர் நடிகர் ராஜ்கிரண் (Rajkiran). இவரது இயற்பெயர் காதர். என்ன பெத்த ராசா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தன்னோடு சினிமாவில் பிரபலங்களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவ்வளவு ஏன், வைகைப்புயல் வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவரே இவர் தான்.

ஒரு நடிகரைத் தொடர்ந்து இயக்குநர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்துள்ளார்.

இவரது நடிப்பில் வந்த என்ன பெத்த ராசா, அரண்மனைக் கிளி, வேங்கை, முனி, கிரீடம், சண்டக்கோழி, திருத்தனி, பாண்டவர் பூமி, என் ராசாவின் மனசிலே, நந்தா ஆகியவை குறிப்பிடத்தக்க படங்கள்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்….

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here