Home சினிமா கோலிவுட் எப்போதும் ஹேர்ஸ்டைலை மாற்றாத ஒரே நடிகர் ராம்கி பர்த்டே டுடே!

எப்போதும் ஹேர்ஸ்டைலை மாற்றாத ஒரே நடிகர் ராம்கி பர்த்டே டுடே!

0
525
Ramki Birthday Today

எப்போதும் ஹேர்ஸ்டைலை மாற்றாத ஒரே நடிகர் ராம்கி பர்த்டே டுடே! சாத்தூரில் பிறந்து வளர்ந்த நடிகர் ராம்கி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

நடிகர் ராம்கி இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராம்கி பிறந்தநாள்

கடந்த 1962 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிறந்தவர் நடிகர் ராம்கி. இவரது இயற்பெயர் ராமகிருஷ்ணன்.

சின்னபூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராம்கி.

இந்தப் படத்தில் ராம்கி, பிரபு, நர்மதா, சுதா சந்திரன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

1987 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சின்ன பூவே மெல்ல பேசு சிறந்த படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.

தொடர்ந்து, தங்கச்சி, இரண்டில் ஒன்று, இது எங்கள் நீதி, சிகப்பு தாலி, செந்தூர பூவே, பூவிழி ராஜா, பறவைகள், அம்மா பிள்ளை பலவிதம் ஆகிய படங்களில் நடித்தார்.

கடந்த 1990 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மருது பாண்டி படம் ராம்கிக்கு திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்திற்கு பிறகு திரைக்கு வந்த இணைந்த கைகள் படமும் அப்படியே அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், கச்சிதமாக நடிக்கும் திறமை கொண்ட ராம்கி, தங்க பாப்பா, வனஜா கிரிஜா, தொட்டில் குழந்தை என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் 10 படங்களில் நடிக்கும் அளவிற்கு ரொம்பவே பிஸியான நடிகராக வலம் வந்தார்.

1987 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சினிமாவில் காலூன்றி வருகிறார்.

எப்போதும் தனது ஹேர்ஸ்டைலை மட்டும் எந்த காரணத்திற்காகவும் மாற்றாத ஒரே நடிகர் ராம்கி மட்டுமே.

ராம்கி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகை நிரோஷாவை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், 3 வருடங்களுக்குப் பிறகுதான் மீடியா மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

குற்றப்பத்திரிக்கை படத்திற்குப் பிறகு சினிமாவில் இடைவெளி எடுத்துக் கொண்ட ராம்கி மீண்டும் மாசாணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார்.

அண்மையில், விஷால் நடிப்பில் வந்த ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார் ராம்கி. தற்போது தெலுங்கில் உருவாகி வரும் டிஸ்கோ ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ராம்கிக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் ராம்கி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… ஹேப்பி பர்த்டே ராம்கி சார்…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here