Home சினிமா கோலிவுட் சாப்டுறது, தூங்குறது – மழலைச் சிறுவன் ராசுக்குட்டி என்ற அஷ்வந்த் வீடியோ!

சாப்டுறது, தூங்குறது – மழலைச் சிறுவன் ராசுக்குட்டி என்ற அஷ்வந்த் வீடியோ!

273
0
Rasukutty aka Ashwanth

Rasukutty aka Ashwanth; சாப்டுறது, தூங்குறது – மழலைச் சிறுவன் ராசுக்குட்டி என்ற அஷ்வந்த் வீடியோ! கொரோனா காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில் நம்ம மழலைச் சிறுவன் ராசுக்குட்டி என்ற அஷ்வந்த் சாப்டுறது, தூங்குறது என்று ரொம்பவே பிஸியாக இருக்கிறார்.

ராசுக்குட்டி என்ற அஷ்வந்த் தற்போது வீட்டில் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்று வெளியிட்டுள்ள வீடியோவை 34 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

அஷ்வந்த் வீட்டில் ரொம்பவே பிஸியாக இருக்கிறாராம். பிரபல தொலைக்காட்சியில் சுட்டிஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றவர் அஷ்வந்த்.

அதோடு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 1 டைட்டிலை வென்றுள்ளார்.

மேலும், ஜூனியர் சீனியர், ஜீ டான்ஸ் லீக் ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வந்த சூப்பர் டீலக்ஸ், விஷாலின் சண்டக்கோழி 2, வெண்ணிலா கபடி குழு 2, ஐரா, காட்பாதர் படத்திலும் நடித்துள்ளார்.

மெல்ல திறந்தது கதவு என்ற தொலைக்காட்சி தொடரில் பிஸியாக இருந்தவர் மழலை செல்வன் ராசுகுட்டி என்ற அஷ்வந்த் Ashwanth Ashok Kumar.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைவருமே வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் நம்ம அஷ்வந்த் வீட்டில் பிஸியாக இருக்கிறாராம்.

ஆம், லாக்டவுன் நேரத்தில் தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது குறித்து காமெடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது வரை 34 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோவில், சாப்பிடுவதற்கு தேவையான ஸ்நாக்ஸ்களை கொண்டுவருகிறார். சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் தூங்குவதற்கு செல்கிறார். மதிய உணவு தயார் செய்த பிறகு அஷ்வந்த் அம்மா அவனை எழுப்புகிறார்.

பொதுவாக அனைத்து குழந்தைகளும் இதைத்தான் வீட்டில் செய்வார்கள். தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் கனவு மாதிரி ஆகிவிட்டது.

அந்த வகையில், பள்ளி விடுமுறை என்பதால், தற்போது லாக்டவுன் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு தங்களது கனவுகளை நினவாக்கி கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பமாக மாறிவிட்டது.

சமீபத்தில் மழலைச் செல்வன் ராசுகுட்டி என்ற அஷ்வந்த் Ashwanth Ashok Kumar கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவில் அவன் பேசுவதை கேட்க கேட்க காதுகளில் இன்பத் தேன் வந்து பாய்வது போன்று தோன்றுகிறது. அந்தளவிற்கு அவன் பேசிய வீடியோ இருந்துள்ளது.

Rasukutty aka Ashwanth Latest Lockdown funny video crossed 34,000 views

SOURCER SIVAKUMAR
Previous articleயாருமில்லைன்னா இப்படித்தான் போல: உள்ளாடைகளுடன் சுற்றும் சிம்பு பட நடிகை!
Next articleவடிவேலு மாதிரி பென்சிலால் மீசை வரைந்த மாகாபா ஆனந்த்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here