வைரலாகும் சங்கவியின் குழந்தை புகைப்படம்! நடிகை சங்கவி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சங்கவியின் குழந்தை புகைப்படம் வைரலாகி வருகிறது.
தல அஜித் நடித்த அமராவதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சங்கவி. இப்படத்தைத் தொடர்ந்து ரசிகன், நாட்டாமை, கட்டுமரக்காரன், லக்கி மேன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பொற்காலம், உளவுத்துறை, நிலவே வா, பாபா, பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் உள்பட ஏராளாமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழியைத் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 1980ஆம் ஆண்டுகளில் ரொம்பவே பிஸியான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் திரைக்கு வந்த ஆணை படத்தைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான கொளஞ்சி என்ற படத்தில் நடித்தார்.
தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே சினிமாவில் அறிமுகமான நடிகை சங்கவி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் படங்கள் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஐடி துறையில் வேலை பார்க்கும் பெங்களூரைச் சேர்ந்த என் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சங்கவி மற்றும் வெங்கடேஷ் தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. தற்போது தனது நடிகை சங்கவி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆம், ஹலோவில் சங்கவியின் குழந்தை என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


