Home சினிமா கோலிவுட் Biskoth First Look: பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Biskoth First Look: பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0
340
Biskoth First Look

Biskoth First Look; பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Santhanam சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பிஸ்கோத். பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் Biskoth First Look போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

காமெடியனாக இருந்து ஹீரோவானவர்களில் நடிகர் சந்தானம் Santhanam ஒருவர். இவர், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என்று பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான படம் டகால்டி. இதில், இவருடன் இணைந்து யோகி பாபுவும் நடித்திருந்தார். எனினும், அப்படி ஒன்றும் வரவேற்பு இல்லை.

தற்போது இவரது நடிப்பில் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, பிஸ்கோத் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் Biskoth First Look

இந்த நிலையில், பிஸ்கோத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Biskoth First Look) போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பிஸ்கோத் படத்தில் சந்தானம் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆர் கண்ணன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். பிஸ்கோத் (Biskoth) படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பாலா ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து சௌகார் ஜானகி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் நடிக்கின்றனர்.

Biskoth பிஸ்கோத் படம் முற்றிலும் காதல் கலந்த நகைச்சுவை கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

இந்தப் படத்திற்காக சந்தானம் சிலம்பம் கற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்தானம், டூவீலரில் இருந்து பறந்து ஒரு கையால் துப்பாக்கியால் சுடுவது போன்றும், மற்றொரு கையில் சூட்கேஸ் வைத்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

மேலும், படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here