Home சினிமா கோலிவுட் ரணகளத்திலும் குதூகலம்:ஸ்ரேயாவின் பால்கனி டான்ஸ்!

ரணகளத்திலும் குதூகலம்:ஸ்ரேயாவின் பால்கனி டான்ஸ்!

338
0
Shriya Saran Dance Video

Shriya Saran; ரணகளத்திலும் குதூகலம்:ஸ்ரேயாவின் பால்கனி டான்ஸ்! நடிகை ஸ்ரேயா பால்கனி நின்று கொண்டு டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகமே கொரோனா (Corona Virus) பீதியில் இருக்கிறது. எத்தனையோ உயிர் இழப்பு ஏற்பட்டும் வருகிறது.

அப்படியிருக்கும் போது பார்சிலோனாவில் இருந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்றை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலக தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று யாரும் தப்பவில்லை.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருந்த நடிகை ஸ்ரேயா சரண், அவரது கணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் பார்சிலோனாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கணவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்ட போதிலும் ஸ்ரேயாவின் அலப்பறைக்கு அளவே இல்லை. அந்தளவிற்கு அவர் நடந்து கொண்டுள்ளார்.

ஆம், கணவருடன் சேர்ந்து கொண்டு பால்கனியில் நின்று கொண்டு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleபாலிவுட் நடிகைகள் எடுத்துக்கொண்ட கையை பாதுகாக்கும் சேலஞ்ச்!
Next articleகனிகா கபூர் முதல் குடியரசு தலைவர் வரை – கொரோனா பரவிய வரைபடம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here