Home சினிமா கோலிவுட் ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் ஸ்ருதி ஹாசன்!

ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் ஸ்ருதி ஹாசன்!

238
0
Shruti Haasan 100 Most Influential People In Asia 2020

Shruti Haasan; ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் ஸ்ருதி ஹாசன்! ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் நடிகை ஸ்ருதி ஹாசன் இடம் பிடித்துள்ளார்.

ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் கொண்ட பட்டியலில் நடிகை ஸ்ருதி ஹாசனும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, 3, பூஜை, புலி, வேதாளம், எஸ்ஐ3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, விஜய் சேதுபதி உடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து, தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில், தண்ணீருக்குள் இருந்தபடியே டான்ஸ் ஆடிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நியூயார்க் செய்தி பத்திரிக்கை நிறுவனம் ஒன்று 2020 ஆம் ஆண்டுக்கான ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீராங்கனைகள், இசையமைப்பாளர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது.

இதில், முதலிடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சானியா மிர்சா, சோயிப் அக்தர், வாசீம் அக்ரம், சோயீப் மாலிக், சானியா நேவால், ஷாகீர் ஹூசைன், பென்னி தயால், நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், கோலிவுட் பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆம், 100 பேர் கொண்ட ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ஸ்ருதி ஹாசன் கிட்டத்தட்ட 68 ஆவது இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் கொண்ட பட்டியலில் நானும் ஒருவராக இருப்பது மரியாதைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

மேலும், கிரண் ராயுடன், தனது வாழ்க்கை, தொழில் மற்றும் தேர்வுகள் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

100 Most Influential People In Asia 2020

Previous articleஆரஞ்சு நிற உடையில் அசத்தும் இந்துஜா: வைரலாகும் புகைப்படங்கள்!
Next articleJoshua: எங்கு போனாலும் கூட்டி செல்வாயா? நான் உன் ஜோஷுவா பாடல் வீடியோ வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here