Home சினிமா கோலிவுட் சூரரைப் போற்று சிங்கிள் டிராக் எப்போது?

சூரரைப் போற்று சிங்கிள் டிராக் எப்போது?

331
1
Soorarai Pottru First Single

மண்ணுருண்ட லிரிக் வீடியோ (Mannurunda Lyrical Video) நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Soorarai Pottru; சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. வரும் மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினத்தை சூரரைப் போற்று படம் வெளியாகிறது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, சம்பத் ராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மண்ணுருண்ட லிரிக் வீடியோ (Mannurunda Lyrical Video)

அதன்படி நாளை மாலை 6 மணிக்கு மண்ணுருண்ட (Mannurunda) லிரிக் வீடியோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தை இயக்கியது ஒரு பெண் இயக்குநர் என்பதால், மகளிர் தினத்தில் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக SudhaKongara மற்றும் SooraraiPottru ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இதற்கு முன்னதாக இன்று காலையில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் துணை நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇந்திய அணியில் மீண்டும் ஹர்திக் பான்டியா
Next articleமாஸ்டர் இரண்டாவது சிங்கிள் அப்டேட் இதோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here