Home சினிமா கோலிவுட் மாநாடு அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

மாநாடு அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

284
0
Maanaadu Update

Maanaadu; மாநாடு அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி! சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

மாநாடு படப்பிடிப்பு குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் சிம்பு. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.

இதில், சிம்பு, பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கல்யாணி ப்ரியதர்ஷினி, சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, வீட்டிலேயே இருந்த சிம்பு, கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.

இதில், த்ரிஷா முக்கிய ரோலில் நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் 2 ஆம் பாகம் என்று இந்த குறும்படம் கூறப்பட்டது. இந்த குறும்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். அதன்படி, அனைவரும் மாநாடு அப்டேட் கேட்டு வருகிறீர்கள்…

தற்போது உள்ள நிலையில், சினிமா துறை முழுவதுமே அரசின் கிரீன் சிக்னலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இன்று எஸ்.ஜே.சூர்யா தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படக்குழு சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

தனக்கென தனிப் பாதை போட்டுக்கொண்ட படைப்பாளி… பல கோடி இதயங்களைக் கொள்ளையடித்த திரைக்கதை வித்தகன்!

தன்னை அப்டேட் செய்துகொள்ளும் சமகாலத் திறமையாளன், பண்பாளன் சகோதரர் SJ சூர்யாவுக்கு என் சார்பாகவும் மாநாடு படக்குழு சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநாடு படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் SJ சூர்யா. STR உடன் இவர் நடிக்கும் காட்சிகள் அனைவரையும் அதிர வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக மகேஷ் பாபு மற்றும் தளபதி விஜய் ஆகியோரது படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

Previous articleவாலி, குஷி படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பர்த்டே டுடே!
Next articleஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகளுக்கு கொரோனா உறுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here