Home சினிமா கோலிவுட் சூர்யா பர்த்டே SuriyaBirthdayFestCDP காமென் DP வெளியீடு!

சூர்யா பர்த்டே SuriyaBirthdayFestCDP காமென் DP வெளியீடு!

313
0
Suriya Birthday Fest CDP

Suriya Birthday Fest CDP; சூர்யா பர்த்டே SuriyaBirthdayFestCDP காமென் DP வெளியீடு! வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், SuriyaBirthdayFestCDP என்ற காமென் DP உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு SuriyaBirthdayFestCDP என்ற காமென் DP வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதன் காரணமாக சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் பிறந்தநாளை இப்போதே கொண்டாடும் வகையில், காமென் டிபி உருவாக்கப்பட்டுள்ளது.

அதனை இன்று வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, SuriyaBirthdayFestCDP என்ற டுவிட்டர் ஹேஷ்டெக்கும் டிரெண்டாகி வருகிறது.

அந்த காமென் டிபி புகைப்படத்தில் சூர்யாவைச் சுற்றிலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பலரும் நடந்து செல்கின்றனர்.

அவருக்கு பின்புறம் பல அடுக்குமாடி வீடுகள் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅண்ணாத்த அப்டேட்: சண்டைக்காட்சிகளை நீக்க சொன்ன ரஜினிகாந்த்?
Next articleயாரையும் பின் தொடர எனக்கு விருப்பம் இல்லை: ஓவியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here