Home சினிமா கோலிவுட் யாரையும் பின் தொடர எனக்கு விருப்பம் இல்லை: ஓவியா!

யாரையும் பின் தொடர எனக்கு விருப்பம் இல்லை: ஓவியா!

247
0
Oviya

Oviya; யாரையும் பின் தொடர எனக்கு விருப்பம் இல்லை: ஓவியா! மற்றவர்களின் வாழ்க்கையில் யாரையும் பின் தொடர எனக்கு விருப்பம் இல்லை என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இப்படத்தைத் தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், புலிவால், 90 எம்.எல்., முனி 4: காஞ்சனா 3, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

எனினும், அந்தளவிற்கு பிரபலமாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியா கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமானார்.

எப்போதும் உண்மையை மட்டும் பேசி, ரசிகர்களுக்கு நேர்மையாக இருந்து ஓவியா ஆர்மி உருவாக காரணமாக இருந்தார்.

மேலும், நிகழ்ச்சியின் போது ஆரவ்வை காதலித்தார். அவரிடமிருந்து மருத்துவ முத்தமும் பெற்றார். அதன் பிறகு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியாவிற்கு பட வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, வீட்டிலேயே இருக்கும் ஓவியா டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது, ரசிகர் ஒருவர் ஏன் டுவிட்டரில் எவரையும் பின் தொடரவில்லை என்று கேட்டார். அதற்கு ஓவியா மற்றவர்களின் வாழ்க்கையில் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசூர்யா பர்த்டே SuriyaBirthdayFestCDP காமென் DP வெளியீடு!
Next articleசனிக்கிழமை மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இருவர் பலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here