Soorarai Pottru Tamilnadu Rights; சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ்க்கு முன்பே ரூ.55 கோடி வியாபாரம்? சூர்யா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சூரரைப் போற்று ரிலீஸ்க்கு முன்பே ரூ.55 கோடி வரையில் வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரரைப் போற்று ரூ.55 கோடி வரையில் வியாபாரம் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ஒரு சாதாரண மனிதன் விமான ஓட்டியாக மாறுகிறான் என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர், மேக்கிங் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.
அதோடு, சூரரைப் போற்று படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மண்ணுருண்ட என்ற பாடல் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.
கிட்டத்தட்ட ரூ.33 கோடியில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், தமிழ்நாட்டு உரிமம் ரூ.55 கோடி வரையில் வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம் மற்றும் தொலைக்காட்சி உரிமம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. கடந்த மே மாதம் வெளியாக இருந்த சூரரைப் போற்று கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக இதுவரை வெளியாகவில்லை.
மேலும், திரையரங்குகள் திறப்பதற்கு இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், சூரரைப் போற்று ஓடிடி தளத்தில் வெளியாகுமா? அல்லது திரையரங்கில் வெளியாகுமா? என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யா உடன் இணைந்து, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, சம்பத் ராஜ், விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.