தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விற்கு கொரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது. அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் செல்லூர் ராஜூவிடம் தொலைபேசியில் பேசினார்
எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் செல்லூர் ராஜூவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கொரோனா பாதிக்கும் மூன்றாவது அமைச்சர்
செல்லூர் ராஜூ தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்றாவது அமைச்சர் ஆவார்.
இதற்கு முன்னர் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த அதிமுக தலைவருமான பி.வளர்மதிக்கும் கொரோனா இருப்பது திங்கள் கிழமை உறுதிசெய்யப்பட்டது மற்றும் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திமுக வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா
திமுக வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ் மஸ்தான்(செஞ்சி), ஆர்.டி.அரசு(செய்யூர்), வசந்தம் கே கார்த்திகேயன்(ரிஷிவந்தியம்) மற்றும் ஜெ.அன்பழகன்(திருவல்லிகேணி-சேப்பாக்கம்) ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் அன்பழகன் கொரோனா தொற்றால் காலமானார்.