Home சினிமா கோலிவுட் Soorarai Pottru: சூர்யா பர்த்டேவுக்கு டிரீட் ரெடி: காட்டு பயலே 2ஆவது சிங்கிள் டிராக் வெளியீடு!

Soorarai Pottru: சூர்யா பர்த்டேவுக்கு டிரீட் ரெடி: காட்டு பயலே 2ஆவது சிங்கிள் டிராக் வெளியீடு!

300
0
Soorarai Pottru Kaattu Payale Video

Soorarai Pottru Kaattu Payale: சூர்யா பர்த்டேவுக்கு டிரீட் ரெடி: காட்டு பயலே 2ஆவது சிங்கிள் டிராக் வெளியீடு! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் 2ஆது சிங்கிள் டிராக் காட்டுப் பயலே 1 நிமிட வீடியோ வரும் 23 ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

காட்டுப்பயலே 2 ஆவது சிங்கிள் டிராக் ஒரு நிமிட வீடியோ வரும் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

கடந்த மே மாதம் சூரரைப் போற்று வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரீலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலரும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் 23 ஆம் தேதி சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு சூரரைப் போற்று படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் காட்டுப்பயலே ஒரு நிமிட வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று அப்டேட் வெளியானதைத் தொடர்ந்து, #SooraraiPottru, #SudhaKongara ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

Previous articleSoorarai Pottru: சூரரைப் போற்று அப்டேட்? டிரைலரா?
Next articleஆடி மாத தரிசனம் 5: பக்தர்களுக்காக இடம் மாறி திரும்பி அமர்ந்த அம்பிகை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here