Home சினிமா கோலிவுட் Soorarai Pottru: சூரரைப் போற்று அப்டேட்? டிரைலரா?

Soorarai Pottru: சூரரைப் போற்று அப்டேட்? டிரைலரா?

304
0
Soorarai Pottru Update

Soorarai Pottru Update; சூரரைப் போற்று அப்டேட்? டிரைலரா?  சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூரரைப் போற்று அப்டேட் இன்று வெளியாக இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

கடந்த மே மாதம் சூரரைப் போற்று வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரீலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

படத்தின் டிரைலரும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தற்போதே கற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர்.

வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ஏற்கனவே சூர்யாவின் பர்த்டே காமென் டிபி புகைப்படம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று அப்டேட் இன்று வெளியாகவுள்ள நிலையில், #SooraraiPottru, #SudhaKongara ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

Previous articleதனுஷ் பர்த்டே Common DP வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்!
Next articleSoorarai Pottru: சூர்யா பர்த்டேவுக்கு டிரீட் ரெடி: காட்டு பயலே 2ஆவது சிங்கிள் டிராக் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here