Home சினிமா கோலிவுட் தனுஷ் பர்த்டே Common DP வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

தனுஷ் பர்த்டே Common DP வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

368
0
Dhanush Birthday Common DP

தனுஷ் பர்த்டே Common DP வெளியீடு! நடிகர் தனுஷ் வரும் 28 ஆம் தேதி தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் தனுஷ் பர்த்டே Common DP வெளியிட்டுள்ளனர்.

தனுஷின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், Common DP உருவாக்கி ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், 3,

வேலையில்லா பட்டதாரி, மாரி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, வட சென்னை, அசுரன் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில், ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் பாலிவுட் படமான Atrangi Re ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

ஒரு நடிகரைத் தொடர்ந்து, இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், ஜகமே தந்திரம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி தனுஷ் தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் Common DP உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தனுஷ் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில், தனுஷ் கையில் வாள் உடன் இருப்பது போன்றும், இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்கள் மெழுகு சிலையாக இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இதே போன்று மேலும் பல புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டுவிட்டரில் #JagameThandhiram, #DhanushBDayCommonDP, #Suruli, #Dhanush ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

Previous articleதமிழகத்தில் இன்று மட்டும் 4807 பேருக்கு கொரோனா , மொத்த கொரோனா தொற்று 1,65,714
Next articleSoorarai Pottru: சூரரைப் போற்று அப்டேட்? டிரைலரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here