Home சினிமா கோலிவுட் தமிழ் சினிமாவில் போலீஸ்: வைரலாகும் நடிகர்களின் போலீஸ் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் போலீஸ்: வைரலாகும் நடிகர்களின் போலீஸ் புகைப்படங்கள்!

304
0
Tamil Cinema Police

Tamil Cinema Police; தமிழ் சினிமாவில் போலீஸ்: வைரலாகும் நடிகர்களின் போலீஸ் புகைப்படங்கள்! தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் தங்களது குரல் எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் ஹரி, காவல்துறையை பெருமைப்படுத்தும் விதமாக சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய 5 படங்களை எடுத்ததற்கு மிகவும் வருத்தப்படுவதாகவும், வெட்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது ஹலோவில், தமிழ் சினிமாவில் போலீஸ் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதில், சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள், நடிகைகளின் புகைப்படங்களை பகிர்ந்து உங்களுக்குப் பிடித்த சிறந்த போலீஸ் நடிகர், நடிகைகள் யார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழக மக்களை கவர்ந்த காவல்துறை அதிகாரி விஜயகாந்த் தான் தமிழ் சினிமாவின் மிக சிறந்த காவல்துறை அதிகாரி என்று பலரும் கூறி வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அஜித் குமார், விஜய், சரத்குமார், விஷால், கார்த்தி, சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சத்யராஜ், சிவாஜி கணேசன், எம்ஜிஆர், அமலா பால்,

விஜயசாந்தி, பானுப்ரியா, காஜல் அகர்வால், சினேகா என்று நடிகர்கள், நடிகைகள் பலரும் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஹலோவில் டிரெண்டாகும் AdvanceHBDHarishKalyan ஹேஷ்டேக்!
Next articleமுதியவர் தனது மனைவியை கொன்று தானும் தூக்கில் தொங்கி தற்கொலை: சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here