முதியவர் தனது மனைவியை கொன்று தானும் தூக்கில் தொங்கி தற்கொலை: சென்னை

முதியவர் தனது மனைவியை கொன்று

சென்னை: ஞாயிற்றுக்கிழமை பெருங்களத்தூரில் 72 வயது முதியவர் தனது மனைவியை கொன்று பின்னர் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

மின்சார உற்பத்தி சாதன பழுதுபார்ப்பவர்

இறந்தவரின் பெயர் ஜகன்நாதன் என்பதும் அவர் மின்சார உற்பத்தி சாதன பழுதுபார்ப்பவர் என்பதும் தெரியவருகிறது மற்றும் அவரது மனைவி சுலோச்சனா வயது 62. இருவரும் டேவிட் நகரில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் குடியிருந்து வந்துள்ளனர்.

இவர்களின் மூன்று மகள்களின் திருமணத்திற்கு பின் தனியாக வசித்து வந்துள்ளனர்.

ஜகன்நாதன் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியுள்ளார்

இறந்தவர்களின் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் சென்று அந்த கட்டிடத்தின் மாடியை சென்று பார்த்த பொழுது ஜகன்நாதன் தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் குழாயில் இறந்த நிலையில் தூக்கில் தொங்கியுள்ளார்.

கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்த சுலோச்சனாவை 

அருகில் இருந்த ஜகன்நாதனின் மனைவியான சுலோச்சனாவை எழுப்ப முயற்ச்சித்த பொழுது அவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்த பீர்க்கங்கரனை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்விற்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை தெரிவிக்கையில், இருவரும் வழக்கமாக  சண்டையிட்டு வந்துள்ளனர் ஞாயிரும் வழக்கமான சண்டை என அக்கம்பக்கத்தினர் நினைத்துள்ளனர் என கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.