Home சினிமா கோலிவுட் விஜய்யை 2ஆவது இடத்துக்கு தள்ளி நம்பர் 1ல் தல: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

விஜய்யை 2ஆவது இடத்துக்கு தள்ளி நம்பர் 1ல் தல: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

367
0
Ajith Ruling Helo

Ajith Ruling Helo விஜய்யை 2ஆவது இடத்துக்கு தள்ளிய தல: கொண்டாடும் அஜித் ரசிகர்கள்! ஹலோ ஆப்பில், தல அஜித் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் எப்போதும், ரசிகர்கள் அடித்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில், அஜித் படங்களை விஜய் ரசிகர்கள் விமர்சிப்பதும், விஜய் படங்களை அஜித் ரசிகர்கள் விமர்சிப்பதும் காலங்காலமாக நடந்து வருகிறது.

அஜித், விஜய் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்களுக்கு அது புரிவதில்லை. மாறாக எதிரிகளாகவே இருக்கின்றனர்.

அஜித்தைப் பற்றி விஜய் புகழ்ந்து பேசுவதும், விஜய்யைப் பற்றி அஜித் புகழ்ந்து பேசுவம் நடந்து வருகிறது.

அப்படியிருக்கும் இந்த ரசிகர்கள் மட்டும் ஏன் அடித்துக்கொள்கிறார்கள் என்பது யாருக்கும் புரியவில்லை.

விஜய்யைவிட அஜித் ரசிகர்கள் எப்போதும் ”தல” மட்டுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கேற்பவும் ரசிகர்கள் தீவிரமாக முயற்சியில் ஈடுபடுவார்கள்.

விஜய் ரசிகர்கள் ஒன்றும் சலித்தவர்கள் அல்ல. இருவருக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும். ஆனால், அஜித் ரசிகர்கள் அவரது ஒவ்வொரு படத்தையும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி டிரெண்டாக்கி அவரை நம்பர் ஒன் இடத்திலேயே வைக்கின்றனர்.

அந்த வகையில், தற்போது ஹலோ ஆப்பில் தல அஜித் நம்பர் ஒன் (Ajith Ruling Helo) இடத்தைப் பிடித்துள்ளார். ஆம், இதற்கு முன்னதாக முதலிடத்தில் இருந்த விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார். 3ஆவது இடத்தில் காமெடி நடிகர் சந்தானம் இருக்கிறார்.

தொடர்ந்து அஜித் ரசிகர்கள்,

இனி எமனே வந்து தடுத்தாலும் தலையை கீழே இறக்க முடியாது.. நாங்கதான் எப்போவுமே கெத்து,

இனிமேல் ஹலோ ஆப்பில் தலையை தவிர வேறு யாரும் வர முடியாது,

நமது அஜித் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார், அதை நீட்டிக்க ஓட்டு போடுங்கள்,

ஆட்டம் வேணாம்னு தான் இருந்தோம்..

ஆட கூடாதுன்னு இல்லை…

நம்பர் ஒன் ..நாங்கதான்

போட்றா வெடிய

அஜித்தை எங்கேயும் தோற்கவிடமாட்டோம் என்று இருப்பவர்கள் இங்கே ஓட்டு போடுங்கள்…

எங்க கூட மோதுறதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசிக்க வேண்டும். யோசிக்காமல் மோதினால், மரண அடி வாங்குவீங்க…

தல இருக்கும் போது வால் ஆடக் கூடாது..

நமது உயிருக்கு மேலான தல அஜித்தை ஜெயிக்க வைப்போம் ஓட்டு போடுங்கள்…

என்றெல்லாம் தல அஜித் ரசிகர்கள் ஹலோவில் பதிவிட்டு வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனாவால் அமெரிக்க நாடே அழியும் விழிம்பிற்கு சென்றுவிட்டது
Next articleதென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு கொரோனா இல்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here