Home சினிமா கோலிவுட் இந்த ஆண்டு தல தீபாவளி இல்லையா? வலிமை எப்போ ரிலீஸ்?

இந்த ஆண்டு தல தீபாவளி இல்லையா? வலிமை எப்போ ரிலீஸ்?

299
0
Valimai Pongal Release

Valimai Release Date; இந்த ஆண்டு தல தீபாவளி இல்லையா? வலிமை எப்போ ரிலீஸ்? அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியுடன் இணைந்து அஜித் நடித்து வரும் தல60 படம் வலிமை.

போலீஸ் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இதுவரை அஜித்திற்கு யார் ஜோடி என்று அறிவிக்கப்படவில்லை. ஒருவேலை மங்காத்தா படம் போன்று என்பதால், அஜித்திற்கு ஹீரோயின் இல்லை என்று கூறப்படுகிறது.

வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதன் காரணமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வலிமை படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக வலிமை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிலும் சண்டைக் காட்சி படமாக்கப்பட இருந்தது. அதுவும், பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஏற்கனவே புது படங்களின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் திரைக்கு வர வேண்டிய படங்கள், இந்த மாதம் வெளியாகும் படங்கள், அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் படங்கள் என்று ஒட்டு மொத்த படங்களின் ரிலீஸும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த படங்களின் ரிலீஸ் இனிவரும் மாதங்களில் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பிருப்பதால், வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வலிமை திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ValimaiPongal2021 என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே சிவா – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் அண்ணாத்த படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இதன் காரணமாக் ஒரே நாளில் இரு படங்களும் வெளியாவதால், படங்களின் வசூல் பாதிக்கப்படுவதோடு, ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்தாண்டு பேட்ட படமும், விஸ்வாசம் படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleயூடியூப்பில் 275 மில்லியன் வியூஸ் வாங்கிய தெறி ஆல்பம்!
Next articleகல்லூரி மாணவனாக விஜய் அடித்த லூட்டி: சச்சின் 15 வருடங்கள் ஓவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here