Vaathi Coming Song; அதுக்குள்ள 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற வாத்தி கம்மிங்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.
வாத்தி கம்மிங் பாடலுக்கு ஒரு மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர். கடந்த 9 ஆம் தேதி திரைக்கு வரயிருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதோடு அல்லாமல், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
எனினும், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்ற தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் மட்டும் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு பலரும் டான்ஸ் வாத்தி ஸ்டெப் சேலஞ்ச் என்ற ஹேஷ்டேக்கில் தங்களது டான்ஸ் ஸ்டெப்புகளை வீடியோவாக பதிவிட்டு வந்தனர்.
இன்னமும் டான்ஸ் ஸ்டெப் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் ஏற்கனவே 8 பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.