Home சினிமா கோலிவுட் மெக்‌ஸிகோ உடையில் நண்பர்களுடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் புகைப்படம்!

மெக்‌ஸிகோ உடையில் நண்பர்களுடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் புகைப்படம்!

273
0
Thalapathy Vijay Mexican Costume

Thalapathy Vijay Mexican Costume; மெக்‌ஸிகோ உடையில் நண்பர்களுடன் இருக்கும் தளபதி விஜய்: வைரலாகும் புகைப்படம்! கடந்த 2014 ஆம் ஆண்டு நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள விஜய் அங்குள்ள பாரம்பரிய உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெக்ஸிகோ உடையில், இருக்கும் விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல கோடி ரசிகர்களை கொண்டிருப்பவர் தளபதி விஜய். நடிப்புக்கும், டான்ஸிற்கும், காமெடி சென்ஸ், பின்னணி பாடகர் ஆகியவற்றிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளங்கள் உண்டு.

கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய், தனது நண்பர்களுடன் இணைந்து வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் நெருங்கி நண்பரும், தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் விஜய்யின் வெளிநாட்டு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தான் தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

2014 நண்பர்களுடன் வெளிநாட்டு டிரிப்” என்று தலைப்பிட்டு இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில், நடிகர் ஸ்ரீநாத்தும் இருக்கிறார்.

அந்தப் புகைப்படத்திற்கு பின்புறம் உள்ள பேனரில் மெக்ஸிகோ என்று எழுதப்பட்டிருப்பதால், இது மெக்ஸிகோவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அங்குள்ள பாரம்பரிய உடை தான் இந்த காஸ்ட்யூம் என்றும் கூறப்படுகிறது.

ஆம், உண்மையில் மெக்ஸிகோ நாட்டு பாரம்பரிய உடைதான் இது. அனைவரும் மல்டி கலர் கொண்ட போர்வை போன்று இருக்கும் சால்வையுடன் தலையில் பெரிய தொப்பிகளையும் அணிந்துள்ளனர்.

ஆனால், விஜய் மட்டும் தொப்பி அணியாமல், வெறும் சால்வையுடன் மட்டுமே இருக்கிறார்.

இது போன்று இன்னும் யாரும் பார்த்திராத புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுமாறு சஞ்சீவிடம் விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகர் சஞ்சீவ் நடித்துள்ளார். மாஸ்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதால், விரைவில் மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleபெண்கள் என்ன வேலைக்காரங்களா? சமையல் செய்த சிம்பு கேள்வி!
Next articleமாஸ்டர் படத்தில் கார் சேஸிங் காட்சி இருக்கு: ஆண்ட்ரியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here