Home சினிமா கோலிவுட் டுவிட்டரில் டிரெண்டாகும் அஜித்BDayIn50D ஹேஷ்டேக்!

டுவிட்டரில் டிரெண்டாகும் அஜித்BDayIn50D ஹேஷ்டேக்!

299
0
Ajith Birthday

Ajith Birthday; அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், അജിത്අජිත්அஜித்BDayIn50D என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

அஜித் (Ajith Birthday) வரும் மே 1 ஆம் தேதி தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் தல அஜித். இவரை படங்களில் பார்ப்பதோடு சரி, பொது நிகழ்ச்சியில் எங்கும் காண முடியாது.

அப்படியே பொது நிகழ்ச்சிக்கு வந்தால் அன்றைய தினம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அண்மையில் கூட ஆத்விக்கின் 6ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அஜித் குடும்பத்தோடு இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதோடு, வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படமும் வைரலானது. ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரயிருக்கிறது.

இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளுக்கு (Ajith Birthday) இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், അജിത്අජිත්அஜித்BDayIn50D என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

எப்போதுதான் அஜித் பிறந்தநாள் வரும் என்று அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிறந்தநாளின் போது நலத்திட்ட உதவிகள், அன்னதானம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், ஏழை, எளியவர்களுக்கு உதவுதல் போன்ற பல சேவைகளை செய்ய தயாராகி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக ஆத்விக் பிறந்தநாளுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல், மனிதாபிமானத்தோடு பலருக்கும் உதவி செய்தல் போன்ற பல சேவைகளை செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள அஜித்துக்கு கேரளா ரசிகர்கள் இந்த டுவிட்டர் ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous article40 ஆண்டுகால வரலாறு: தலித் தலைவர்; பாஜகவின் புதிய புரட்சி – சிஎம் நாற்காலி தயார்
Next article12/03/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here