Home சினிமா கோலிவுட் ‘துப்பாக்கி’ சீக்குவல் தான் ‘தளபதி 65’.. விஜய்-க்கு ஜோடியாக 2 முன்னணி ஹீரோயின்ஸ்!

‘துப்பாக்கி’ சீக்குவல் தான் ‘தளபதி 65’.. விஜய்-க்கு ஜோடியாக 2 முன்னணி ஹீரோயின்ஸ்!

572
0

Thalapathy 65 : ‘தளபதி’ விஜய்யின் 65-வது படம் (Thalapathy 65) குறித்த சுவாரஸ்ய தகவல் கசிந்துள்ளது.  கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ‘தளபதி’ விஜய் (Thalapathy Vijay). இவர் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் புதிய படம் ‘மாஸ்டர்’.

‘XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘கைதி’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெகு விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ‘தளபதி’ விஜய்யின் 65-வது படத்தை (Thalapathy 65) முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளாராம். இப்படம் 2012-ஆம் ஆண்டு விஜய் – முருகதாஸ் காம்போவில் வெளியாகி மெகா ஹிட்டான ‘துப்பாக்கி’ படத்தின் சீக்குவலாம்.

இன்னும் பெயரிடப்படாத இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கவிருக்கிறார். தற்போது, ‘தளபதி’ விஜய்யின் 65-வது படத்தில் (Thalapathy 65) அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

Previous articleரஜினி, கமல் உடன் ஜோடி சேர்ந்த நடிகை ஜெயபிரதா பர்த்டே டுடே!
Next articleஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் செய்த ஹரிஹரன் பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here