Home சினிமா கோலிவுட் புதிய தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி: வைரலாகும் புகைப்படம்!

புதிய தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி: வைரலாகும் புகைப்படம்!

414
0
Vijay Sethupathi Recent Pics

Vijay Sethupathi Recent Pics; புதிய தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி: வைரலாகும் புகைப்படம்! தாடி மீசை அதிகமாக இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய தோற்றத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதே போன்று அண்மையில், மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் எப்படி என்பது குறித்து விஜய் சேதுபதி தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக முடங்கியிருக்கிறது. அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக புதிய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலே இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி வெள்ளை நிற தாடியுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதோடு, அவருக்கு அருகில், அவரது மகள், ஸ்ரீஜா விஜய் சேதுபதி ராயல் என்பீல்டு பைக்கில் அமர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் தான் வெளியாகியுள்ளது.

Previous articleபுதிய கதை எழுதியுள்ள கமல் ஹாசன்: ஓடிடியில் ரிலீஸ்!
Next articleஆடி மாத தரிசனம் 1: ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தரிசனம்! ஆயிரங்காளியின் அற்புதங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here