Home சினிமா கோலிவுட் #Vijay65 படத்தை இயக்கப்போவது இவரா?

#Vijay65 படத்தை இயக்கப்போவது இவரா?

1541
0

#Vijay65 படத்தை இயக்கப்போவது இவரா? சம்பளம் கூட வாங்கிவிட்டாரா? கோடம்பாக்கத்தில் கசிந்துவரும் தகவல்.

விஜய்யின் 65-வது திரைப்படத்தை இயக்கப்போவது ஜெயம் ரவி நடிப்பில் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த புதுமுக இயக்குனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

#Vijay65  Movie Update

விஜய் இப்போது நடித்துவரும் படம் மாஸ்டர் 64-வது படமான இப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தில் மருத்துவப் படிப்பை பற்றி விஜய் முக்கியமாக பேசுவதாக தகவல் வருகின்றன. இந்த நிலையில் தான் விஜய்யின் 65-வது படத்தின் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதில் நிறைய இயக்குனர்களின் பெயர் அடிபடுகிறது, இப்போது ஒரு புதுத்தகவல் கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் விஜய்யின் 65-வது படத்தை தயாரிக்கிறார்களாம்.

இப்படத்தை இயக்கப்போவது ‘அடங்க மறு’ பட இயக்குனர் கார்த்திக் தங்கவேல் என்றும், அதற்காக அவருக்கு சம்பளமும் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், விஜய் சமீபமாக ஹிட் படங்கள் கொடுத்து வரும் புதுமுக இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க விருப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபெரியார் சர்ச்சை: படிக்கத்தெரியாத ரஜினி எப்படி படித்தார்?
Next articleதை அமாவாசை: ஏன் எதற்கு வழிபட வேண்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here