Home ஆன்மிகம் தை அமாவாசை: ஏன் எதற்கு வழிபட வேண்டும்?

தை அமாவாசை: ஏன் எதற்கு வழிபட வேண்டும்?

தை அமாவாசை: ஏன் எதற்கு வழிபட வேண்டும்? புனித நீராடல், முன்னோர்களுக்கு தர்பணம், குல தெய்வ வழிபாடு ஏன் செய்யவேண்டும். இதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இந்து மத நம்பிக்கைகளில் திதிகளுக்கென்று தனி இடம் உண்டு. எந்த திதிகளில் என்ன காரியங்கள் செய்யலாம் என்று வகுத்து வைத்துள்ளனர்.

தை அமாவாசை புனித நீராடல் குல தெய்வ வழிபாடுஅதிலும் அமாவாசை, பௌர்ணமி போன்றவை இறை வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு, குருமார்கள் வழிபாடு போன்றவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

அதிலும் குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசை திதி அதீத பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது. ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசைகள் வழிபாடானது கூடுதல் பலன்களைத் தரும் தை அமாவாசையின் சிறப்புகள் பற்றி காண்போம்.

புனித நீராடல்

தை அமாவாசையன்று புனித நதிகள் மற்றும் சமுத்திரங்கள் சென்று புனித நீராடி அங்குள்ள இறைவனை தரிசித்து வர அவர்களின் பாவம் நீங்குவதோடு முன்னோர்கள் செய்த பாவங்களும் நிவர்த்தியாகும்.

தை அமாவாசையன்று இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்தினி அம்பாளின் உற்சவ மூர்த்தங்கள் அங்கே உள்ள அக்னி தீர்த்ததிற்கு கொண்டு செல்லப்பட்டு புனித நீராடல் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று புனித நீராடுவர்.

முன்னோர்களுக்கு  தர்பணம்

முன்னோர்களுக்கு  தர்பணம்

சூரியனை பித்ருகாரகன் என்பர். அப்படிப்பட்ட சூரியன் தன் மகனின் ஆட்சி வீடான மகர ராசியில் தை மாதத்தில் சஞ்சரிக்கிறார். சந்திரனை மாத்ருகாரகன் என்பர்.

சூரியன் சந்திரனுடன் சேர்ந்து சனியின் ஆட்சி வீட்டில் சஞ்சரிக்கும் நாளே தை அமாவாசை நாளாகும். எனவே தான் இந்நாளில் பித்ரு தர்பணம் மிகச்சிறப்பு எனக் கருதப்படுகிறது.

தை அமாவாசையில் நாம் நமது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு அவர்களின் பசி மற்றும் தாகம் தனிந்து நற்கதி அடைய தர்பணம் தர வேண்டும்.

மற்ற அமாவாசைகள் மற்றும் இறந்த திதியில் தர்பணம் தர மறந்தாலும் தை அமாவாசையில் தர வேண்டும்.

ஏனெனில் தை அமாவாசை முடிந்ததும் பித்ருக்கள் பித்ரு லோகம் திரும்பி விடுவர். அடுத்த மகளாய பட்சம் வரும் வரை அவர்கள் பூமிக்கு வர அனுமதியில்லை.

பித்ருகளுக்கு தர்பணம் ஆனதும் ஏழைகளுக்கோ, ஆதரவற்ற முதியோர்களுக்கோ அல்லது பசுக்களுக்கோ நம்மால் இயன்ற பொருட்களைத் தானமாக தர வேண்டும்.

தர்பணம் என்றால் பிண்டம், எள், தண்ணீர் மட்டுமே மாறாக உடைகள் போன்ற பொருட்களை நீர் நிலையில் சேர்ப்பது தவறு. நீர் நிலைகளை மாசுபடுத்துவது பாவம் ஆகும்.

உடை போன்ற பொருட்களை ஆதரவற்றோருக்கு கொடுத்து உதவுங்கள். அவர்களுக்கு ஒருவேளை உணவாவது வழங்கினால் போதும் உங்களின் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவர். அன்னதானம், வஸ்திர தானங்கள் செய்யுங்கள் ஏழு ஜென்ம பாவங்களும் போகும்.

இராமேஸ்வரம், வேதாரண்யம், பவானி, கொடுமுடி, பூம்புகார், கோடியக்கரை, திருப்புல்லாணி, காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற நதிக்கரையில் அமைந்த தலங்களில் சென்று புனித நீராடி பித்ரு தர்பணம் செய்து பித்ருக்களின் ஆசிகளைப்பெற வேண்டும்.

சூரியன் திருகல்யாண விழா

குல தெய்வ வழிபாடு முன்னோர்களுக்கு  தர்பணம்இந்தியாவில் சூரியனுக்கு இரண்டு கோவில்கள் உள்ளன. அதில் ஒன்று ஒடிசாவிலும். மற்றொன்று நம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை அருகில் சூரியனார் கோவில் என்ற பெயரில் உள்ளது.

சூரியனார் கோவிலில் சூரியன் உஷா மற்றும் சாயா தேவியருடன் காட்சி தருகிறார்.

இங்கே தை அமாவாசை துவங்கி பத்து நாட்கள் சூரியனின் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

இரவு தாடங்கம் மூலம் பகல் ஆனது

இரவு தாடங்கம் மூலம் பகல் ஆனது

தை அமாவாசை அன்று தான் திருக்கடையூர் அபிராமி அம்பிகை தனது பக்தனான அபிராமி பட்டரின் வாக்கு பொய்க்கக் கூடாது என்பதற்காக அமாவாசை இருளை தன் தாடங்கத்தின் (தோடு) ஒளியின் மூலம் பௌர்ணமியை தோற்றுவித்தாள்.

இவ்வாறே இரவு தாடங்கம் மூலம் பகல் ஆனது.

பட்டருக்கு அருள் புரிந்து அபிராமி அந்தாதி பாட செய்து அவரின் புகழ் மற்றும் நூலினை உலகறியச் செய்தாள். இன்றும் திருக்கடையூரில் தை அமாவாசை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இன்னாளில் அன்னையைப் போற்றி அபிராமி அந்தாதியை பாடினால் சிறந்த பலன்களை மகிழ்ந்து அருளுவாள்.

குல தெய்வ வழிபாடு

நம் பரம்பரையை காத்து தெய்வங்களான முன்னோர்களையே பெரும்பாலும் குல தெய்வங்களாக வழிபடுகிறோம். வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் எங்கு இருந்தாலும் நம் குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்.

குறிப்பாக தை அமாவாசை அன்று குல தெய்வ வழிபாடு  செய்வது சகல தோசங்களும் நீங்கி நம் சந்ததியினர் அனைவரும் குறையின்றி வாழ்வர் என்பது நம் முன்னோர்கள் கண்டு உணர்ந்த உண்மை.

இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் (இன்று) தை அமாவாசை வருகின்றது. இந்நாளில் நம்மால் இயன்ற தான தருமங்களை அதரவற்றோர் மற்றும் பசுக்களுக்கு அளித்து சகல தோஷங்களும் நீங்கி சிறப்புடன் வாழ்வோம்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular