போதை தலைக்கேறிய விமல்; சக நடிகரை அடித்துத் துவைத்தார்
கன்னட சினிமா நடிகர் அபிஷேக் என்பவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
இரவு வாசலில் அமர்ந்து போன் பேசியுள்ளார். அப்போது அங்கு நடிகர் விமல் தன் நண்பர்களுடன் வந்துள்ளார்.
5 பேரும் நன்கு குடித்துவிட்டு புல் போதையில் விடுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த அபிசேக்கிடம் ரூம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
அதற்கு நடிகர் அபிஷேக், நான் இங்கு வேலை செய்யவில்லை எனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார்.
வேலை செய்யவில்லை என்றால் இங்கு என்ன உனக்கு வேலை என அவரை புரட்டி எடுத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் அபிஷேக் காயமடைந்துள்ளார்.
ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விமல் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ன நடந்தது என விசாரணை செய்து வருகின்றனர்.