Home சினிமா கோலிவுட் குஞ்சாலி மரைக்கார்: வரலாற்றுப் படத்தில் கீர்த்தி சுரேஷ்

குஞ்சாலி மரைக்கார்: வரலாற்றுப் படத்தில் கீர்த்தி சுரேஷ்

415
0
மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் குஞ்சாலி மரைக்கார் கீர்த்தி சுரேஷ்

குஞ்சாலி மரைக்கார்: வரலாற்றுப் படத்தில் கீர்த்தி சுரேஷ். மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் மோகன்லால் நடிப்பில் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் படம்.

தேசிய விருது வென்ற நடிகை என்று பெயர் பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷுக்கு படங்களின் வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளன.

சாவித்திரி பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியப் பிறகு தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது மலையாளத்தில் தனது தடத்தை பதிக்க இருக்கிறார்.

மரைக்கார் திரைப்படம்

நடிகர் மோகன்லால் நடிக்கும் மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைய இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷின்  சமீபத்திய போட்டோ சூட் முடிந்து அதனை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் தோற்றம் வெகுவாக ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

வலைதளத்தில் வைரலாகி கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தவாறு இருக்கின்றனர் ரசிகர்கள். 

இப்படத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் உட்பட மஞ்சு வாரியார், ஆக்சன் கிங் அர்ஜூன், பிரபு, சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் உட்பட ஏராளமான தமிழ், மலையாள நடிகர்கள் நடிக்கின்றனர்.

மரைக்கார் வரலாறு

இந்த திரைப்படத்தின் கதை 16ம் நூற்றாட்டில் வாழ்ந்த நான்காவது குஞ்சாலி மரைக்கார் என்ற கடற்படை தலைவரின் கதை.  

இவரின் வீரதீர செயல்கள் தற்பொழுது வரை கேரளாவில் பிரபலம். மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார்.

இதுவரை இல்லாத அளவிற்கு மோகன்லால் இந்த கதாபாத்திரத்திற்காக ரொம்பவே மெனக்கெடுகிறார். 

திரைப்படத்தின் பட்ஜெட்

சுமார் ரூ.100 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற 5 மொழிகளில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

திரையரங்க வெளியீடு 

இப்படம் உலகம் முழுதும் தோராயமாக 5000 திரை அரங்குகளை அலங்கரிக்கும் என தகவல்கள் வெளியிட்டு இருக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ் இந்தப் படம் தனக்கான நடிப்பை மேலும் பலப்படுத்தும் எனவும், நடிகையர் திலகம் திரைப்படத்தை போல இந்தப் படமும் தனக்கு நல்ல பெயரை கொடுக்கும் எனவும்  நம்புகிறார்.  

2020-ல் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என 7-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

Previous articleடிஎன்பிஎஸ்சி குரூப்-1: TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு
Next articleசீனாவில் புதிய வைரஸ்: மூன்று மடங்கு அதிகரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here