Home சினிமா கோலிவுட் மாஸ்டரை 10 முறை பார்த்தேன்: லோகேஷ் கனகராஜின் முதல் விமர்சனம்!

மாஸ்டரை 10 முறை பார்த்தேன்: லோகேஷ் கனகராஜின் முதல் விமர்சனம்!

331
0
Master Movie Review

Master Movie Review; தளபதி விஜய்யின் மாஸ்டரை 10 முறை பார்த்தேன்: லோகேஷ் கனகராஜ்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெருமையாக கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்ததாகவும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், புதிதாக பார்ப்பது போன்று தோன்றுகிறது என்று படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கைதி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, நாசர், சாந்தணு, சஞ்சீவ், பிரேம் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. அதோடு, குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாஸ்டர் படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் விமர்சனம் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாஸ்டர் படம் நன்றாக வந்துள்ளது.

போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளின் போது, மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்திருப்பேன்.

ஒவ்வொரு முறை பார்த்த போதும், முதல் முறை பார்த்தது போன்ற உணர்வையே படம் கொடுத்துள்ளது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த படமாக இந்தப் படம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆடி மாத தரிசனம் 5: பக்தர்களுக்காக இடம் மாறி திரும்பி அமர்ந்த அம்பிகை!
Next articleமுதல் முறையாக பிரபாஸ் உடன் இணைந்த தீபிகா படுகோனே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here