Home சினிமா கோலிவுட் மாஸ்டர் ரிலீஸ் தேதி க்லூ கொடுத்த ஆண்ட்ரியா

மாஸ்டர் ரிலீஸ் தேதி க்லூ கொடுத்த ஆண்ட்ரியா

562
0
மாஸ்டர் ரிலீஸ் தேதி

மாஸ்டர் ரிலீஸ் தேதி க்லூ கொடுத்த ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா, லோகேஷ் கனகராஜ் உடன் டிஸ்க்ஷன் செய்துகொண்டு இருக்கும் படத்தை வெளியிட்டு மாஸ்டர் ரிலீஸ் தேதி பற்றி க்லூ கொடுத்துள்ளார்.

பிகில் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்து வரும் அடுத்த திரைப்படம் மாஸ்டர். இது ஒரு வித்தியாசமான திரைப்படமாக உருவாகி வருகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன் மாநகரம், கைதி என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மாளவிகா மோகனன், விஜய்க்கு நாயகியாக நடிக்கிறார்.

மாஸ்டர் படப்பிடிப்பு தளம்

படப்பிடிப்பு விறுவிறுப்பாக டெல்லியிலும், கர்நாடகாவிலும் உள்ள சிறைச்சாலையில் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியிலும் முக்கியக் காட்சிகளை படமாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆண்ட்ரியா லோகேஷ் கனகராஜ்

ஆண்ட்ரியா லோகேஷ் கனகராஜ்

கவர்ச்சியான வேடத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாக வதந்திகள் பரவுகிறது. அதுவும் கவர்ச்சிகரமான பேராசிரியர் வேடமாம்.

நடிகை ஆண்ட்ரியா, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “அதிசயிக்கும் திறமை கொண்ட இயக்குநருடன், 2020 ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றான ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றுகிறேன். வரும் பிப்ரவரியுடன் எனக்கான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைகிறது”  என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மாஸ்டர் திரைப்படம் வெளியீடு

‘மாஸ்டர்’ கோடை விடுமுறை நேரத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரியுடன் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளன. அதனை ஆண்ட்ரியாவின் பதிவும் உறுதி செய்துள்ளது.

எனவே இப்படம் கோடை விடுமுறையை டார்கெட் செய்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous article#UnrivledTamilActors: தெறிக்க விடும் தல-தளபதி ரசிகர்கள்
Next articleநடிகர் தனுஷ் – அக்ஷய்குமார் இணையும் புதிய படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here