Home சினிமா கோலிவுட் #UnrivledTamilActors: தெறிக்க விடும் தல-தளபதி ரசிகர்கள்

#UnrivledTamilActors: தெறிக்க விடும் தல-தளபதி ரசிகர்கள்

290
0
#UnrivledTamilActors தல-தளபதி

#UnrivledTamilActors: ட்விட்டரை தெறிக்க விடும் தல-தளபதி ரசிகர்கள். #UnrivledTamilActors ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்.

திரைப்படத்திற்கும் மக்களுக்கும்  மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.குழந்தை பிறப்பு, காது குத்து, சடங்கு, கல்யாணம் முதல் இறப்பு வரை  சினிமா நட்சத்திரங்களின் கட்டவுட் மற்றும் பிளக்ஸ்போர்டுகளுக்கு தமிழ்நாடு மிகப் பிரபலம்.

வலைத்தளமும் இதற்கு விதி விலக்கல்ல. திரைப்பட மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களின் ரசிகர்கள் தங்கள்  வலிமையையும் விசுவாசத்தையும் காட்டும் இடம் சமூக ஊடகம்.

முன்னணியில் இருக்கும் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்கள் யாரும் ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக்கொள்வதில்லை.

பொதுவாக நண்பர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் ரசிகர்கள் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது இணையத்தில் எதிர்மறையாக  ட்ரோல் செய்வது இயல்பாக உள்ளது.

இதில் மிகவும் முக்கியமானது,  தல மற்றும் தளபதி ரசிகர்கள். அவர்கள் நாள் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஹேஷ்டேக்குகளை உருவாக்குகிறார்கள்.

பிரபலமான திரைப்பட நட்சத்திரங்களின்  புதிய படங்கள் வெளியாகும்போது    சில இடங்களில் வெட்டுக் குத்து அளவுக்குப்போன வரலாறுகளும்  தமிழ்நாட்டில்  உண்டு.

இன்று #UnrivledTamilActors என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.  தல அஜித் மற்றும் தளபதி  விஜய் ரசிகர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து  தற்காலிகமாக இணைந்து உள்ளனர்.

ஹார்ட்கோர் தெலுங்கு சினிமா ரசிகர்கள்  #TeluguRealHeroes என்ற ஹேஷ்டேக்கை முதலில் தொடங்கினர். இது முதலில் பிரபலமாக இருந்தது. பின்னர்  தமிழ் ஹீரோக்களை வசை பாடத் தொடங்கினர்.

இப்போது அஜித் மற்றும் விஜய் மட்டுமல்ல ரஜினி, கமல், சூரியா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி மற்றும் ஜீவா ரசிகர்களின் ரசிகர்களும் சேர்ந்துள்ளனர்.

தெலுங்கு ஹீரோக்களில் சிலரின்  மிக மோசமான நடிப்பைப்  பற்றி தமிழ்த்  திரைப்பட ரசிகர்களும்  கேலி கிண்டல்களை ட்விட்டரில் ஷ்டேக்க்குகளாக  உருவாக்குகிறார்கள்.

பொதுவாகத்  தென்னிந்திய சினிமாவில் தமிழ் படங்கள் பெரிதும் ரசிக்கப்படுகிறது. தெலுங்கு மற்றும் மலையாளம் நடிகர்கள்  தமிழ் சினிமாவில்  மிகவும் பிரபலம்.

கலைகளுக்கு எப்போதும் மொழி ஒரு தடை இல்லை. அவ்வப்போது இது மாதிரியான சில வாய்க்கால் தகராறுகளும் நடந்து கொண்டேயிருக்கும்.

இன்று இந்தியாவில் ட்விட்டரில் முதலிடத்தில் இருப்பது #UnrivledTamilActors ஹேஷ்டேக்குகளாக இருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது

Previous articleசைக்கோ பாடல் வரிகள் எனக்குள் ஏற்படுத்திய மாற்றம்
Next articleமாஸ்டர் ரிலீஸ் தேதி க்லூ கொடுத்த ஆண்ட்ரியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here