Home சினிமா கோலிவுட் Mookuthi Amman First Look: மூக்குத்தி நயன்தாரா!

Mookuthi Amman First Look: மூக்குத்தி நயன்தாரா!

443
0
Mookuthi Amman First Look மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் நயன்தாரா

Mookuthi Amman First Look: நாயன்தாரா மூக்குத்தி அணிந்து மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில், ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மூக்குத்தி அம்மன்

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் ஆர்.ஜே. பாலாஜி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mookuthi Amman First Look

மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

நேற்று முதல் டுவிட்டரில் #MookuthiAmman என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவின் ஒரு முகம்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தாரா தலையில் கிரீடம் வைத்திருப்பது போன்றும், மூக்குத்தி அணிந்திருப்பது போன்றும், அம்மனுக்கு பிடித்த நிறமான மஞ்சள், பச்சை நிறங்களில் சேலை அணிந்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

அதோடு, நயன்தாராவின் இடதுபுறம் முகம் மட்டும் தெரியும் படி போஸ்டரில் புகைப்படம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக நயன்தாரா இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு முன்னதாக, விஜயசாந்தி, மீனா, ரோஜா, கேஆர் விஜயா, பானுப்ரியா என்று மாஸ் நடிகைகள் பலரும் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலங்களில் உருவாக்கப்பட்ட பக்தி படங்களில் ஜெயலலிதா உள்ளிட்ட பல நடிகைகள் சக்தி, பார்வதி போன்று அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரதம் இருந்த நயன்தாரா

மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா விரதம் இருந்துள்ளார். மேலும், அவர் அசைவ உணவுகளையும் சாப்பிடவில்லையாம். முழுக்க முழுக்க தன்னை படத்திற்காகவே அர்ப்பணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்காக அவர் அதிகளவில் சம்பளமும் வாங்கியுள்ளாராம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Previous articleSuriya39: சூர்யா39 படத்திற்கு அருவா என்று டைட்டில் வைத்த இயக்குநர் ஹரி!
Next articleWWCT20I WIw vs ENGw: அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here