Vijay Sethupathi; சாமிக்கு செய்யும் அபிஷேகம் குறித்து கொச்சை பேச்சு: விஜய் சேதுபதி மீது புகார்!விஜய் சேதுபதி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. தனது எதார்த்தமான பேச்சு, நடிப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.
வருடத்திற்கு 6க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். எப்போதும் நியாயமாக பேசும் குணம் கொண்டவர். இந்த நிலையில், அவர் மீது திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையிலான நிர்வாகிகள் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, கோயில்களில் சாமிகளுக்கு செய்யப்படும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகள் குறித்து கொச்சைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்துக்களின் மனதை புண்படுத்தியிருக்கும் வகையில், அமைந்துள்ளது.
இதன் காரணமாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில், கோயில்கள் பற்றி பேசிய ஜோதிகாவின் கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.