Home சினிமா கோலிவுட் கோலிவுட்டின் அடுத்த தம்பதியினர்: 8 ஆவது ஆண்டு திருமண நாளில் பிரசன்னா – சினேகா!

கோலிவுட்டின் அடுத்த தம்பதியினர்: 8 ஆவது ஆண்டு திருமண நாளில் பிரசன்னா – சினேகா!

318
0
Sneha Prasanna Wedding Anniversary

Sneha Prasanna Wedding Anniversary; கோலிவுட்டின் அடுத்த தம்பதியினர்: 8 ஆவது ஆண்டு திருமண நாளில் பிரசன்னா – சினேகா! கோலிவுட் சினிமாவின் அடுத்த சிறப்பான தம்பதியினர்களாக பிரசன்னா மற்றும் சினேகா ஜோடியினர் வலம் வருகின்றனர்.

8 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் பிரசன்னா மற்றும் சினேகா ஜோடிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோலிவுட்டில் இருக்கும் இனிமையான ஜோடிகளில் பிரசன்னா மற்றும் சினேகா தம்பதியினரும் ஒருவர். கடந்த 2012 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நட்சத்திர தம்பதியினருக்கு விஹான் என்ற மகன் இருக்கிறான். இதையடுத்து, கடந்த ஜனவரி 24 ஆம் தேதி இந்த தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

அதனை பிரசன்னாவும் தனக்கு மகள் பிறந்ததை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், இன்று தங்களது 8 ஆவது ஆண்டு திருமண நாளை இருவரும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

வெற்றிகரமாக 8 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள காதல் ஜோடி தம்பதியினருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது ஆண்டு திருமண நாள் குறித்து பிரசன்னா கூறியிருப்பதாவது: சினேகாவுடன் இது பிரமாதமான, அன்பான 8 வருடங்கள்.

எனக்கு கிடைத்த வரம் என்றே நினைக்கிறேன். இன்னும் சிறப்பான வருங்காலத்திற்காக உங்களின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சினேகாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தார்.

என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த சினேகா நல்ல கதை உள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

பிரசன்னாவும் அப்படித்தான். திருமணத்திற்குப் பிறகு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் கணவன் மனைவியாக நடித்துள்ளனர்.

தற்போது சினேகா நடிப்பில் வான் படம் உருவாகி வருகிறது. இதே போன்று பிரசன்னா நடிப்பில் துப்பறிவாளன் 2 படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஊரடங்கை மீறிய சர்ச்சை நடிகை பூனம் பாண்டே: மும்பை போலீஸ் அதிரடி ஆக்‌ஷன்!
Next articleஇந்திய தொடர்வண்டி துறை ஆன்லைன் முன்பதிவை தொடங்கியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here