Home சினிமா கோலிவுட் நான் ஒரு போஸ்ட் மேன்: வைரலாகும் ரைசா வீடியோ!

நான் ஒரு போஸ்ட் மேன்: வைரலாகும் ரைசா வீடியோ!

280
0
Raiza Post Man Video

Raiza Post Man Video; நான் ஒரு போஸ்ட் மேன்: வைரலாகும் ரைசா வீடியோ! நான் ஒரு போஸ்ட் மேன் என்று கூறும் ரைசாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரைசாவின் புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

இவர், தனது பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. காதலை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் திருமணத்திற்கு முன்னதான காதல் காம உணர்வை மையப்படுத்தியது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாகவே இருக்கும் ரைசா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

உங்களது நெருங்கியவர்களுக்கு நீங்கள் பிறந்தநாள் வாழ்த்து, திருமண நாள் வாழ்த்து அல்லது ஏதாவது செய்தி அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் என்னிடம் சொல்லுங்கள்.

நான் உங்களது மெசேஞ்சராக Messenger மாறி அந்த மெசேஜ்ஜை உரியவர்களுக்கு அனுப்பி உங்களை சேர்த்து வைக்கிறேன். இதை செய்வதற்கு எனக்கு ஆர்வமாக இருக்கிறது.

மேலும், உங்களது மெசேஜ்களை பார்ப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறேன். இதன் மூலம் நான் போஸ்ட் மேனாக இருப்பேன் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்ரன், த்ரிஷா, ரைசா என்று சினிமா பிரபலங்கள் பலரும் டிக் டாக்கில் இணைந்திருந்தனர். டிக் டாக்கில் நிறைய வீடியோக்களை அவர்கள் பதிவிட்டு வந்தனர். இண்ட நிலையில், 59 Appsகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், ரைசா வில்சன் கடைசியாக டிக் டாக்கிற்கு குட்பை சொல்லும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅருவிக்கு அருகில் போட்டோஷூட்: வைரலாகும் ஐஸ்வர்யா மேனன் அழகான புகைப்படங்கள்!
Next articleமலேசியா, பிரான்ஸில் மீண்டும் வெளியான தல அஜித்தின் விஸ்வாசம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here