Annaatthe Fight Scene; அண்ணாத்த அப்டேட்: சண்டைக்காட்சிகளை நீக்க சொன்ன ரஜினிகாந்த்? அண்ணாத்த படத்தில் வரும் சண்டைக்காட்சிகளை ரஜினிகாந்த் நீக்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்தின் சண்டைக்காட்சிகளை ரஜினிகாந்த் நீக்கச் சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர்168 படம் அண்ணாத்த. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
கொரோனா முற்றிலும் சரியான பிறகே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதோடு, படத்தில் வரும் சண்டைக்காட்சிகளை நீக்கவும் இயக்குநரிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால், சண்டையிடும் போது, நடிகர்களை தொட்டு நடிப்பதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும். ஆகையால், சண்டைக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் இவ்வாறு கூறியதைக் கேட்ட இயக்குநர் சற்று கவலையில் இருக்கிறாராம். பொதுவாக ரஜினி என்றாலே ஸ்டைலும் சண்டையும் தான்.
அப்படி மாஸ் சண்டைக்காட்சிக்கு பேர் போன ரஜினியே சண்டை வேண்டாம் என்று கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. எனினும், ரஜினி மற்றவர்களின் நலன் கருதியே இவ்வாறு கூறியது பலரது பாராட்டை பெற்று வருவதாக கூறப்படுகிறது.