Ramya Krishnan; முத்தம் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்: வைரலாகும் புகைப்படம்! லாக்டவுனில் ரொம்பவே பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரம்யா கிருஷ்ணன் முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். விஜய்காந்த், சரத்குமார், ரஜினிகாந்த் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
எனினும், அவரது நீலாம்பரி என்ற கதாபாத்திரம் தான் இன்றும் பேசப்படும் ஒரு கதாபாத்திரமாக கருதப்படுகிறது.
அதைவிட பாகுபலி சிவகாமி ராஜமாதா கதாபாத்திரமும் பட்டி தொட்டியெங்கும், உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகலீல் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஒரு சில படங்களில் குத்தாட்டம் போடும் பாட்டுக்கும் டான்ஸ் ஆடியுள்ளார்.
அவர் நடித்த குயின் வெப் சீரிஸ் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. பிரபல இயக்குநர் கௌதவ் வாசுதேவ் மேனன் மற்றும் கிடாரி’ திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில் பிரபலங்கள் ரொம்பவே பிஸியாக இருக்கின்றனர்.
ஆம், சமையல், துணி துவைப்பது, தோட்ட வேலை பார்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று ரொம்பவே பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில், ரம்யா கிருஷ்ணன், நடிகை சார்மி உடன் வீடியோ கால் பேசியுள்ளார். இருவருமே ஒருவருக்கொருவர் முத்தம் கொடுப்பது போன்று Screenshot எடுத்த புகைப்படத்தை சார்மில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது ரம்யா கிருஷ்ணன் முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.