Home சினிமா கோலிவுட் தக்காளி, வெங்காயம் வெட்ட கற்றுக் கொடுத்தவர் தல: ரோபோ சங்கரின் அஜித் நினைவுகள்!

தக்காளி, வெங்காயம் வெட்ட கற்றுக் கொடுத்தவர் தல: ரோபோ சங்கரின் அஜித் நினைவுகள்!

462
1
Thala Ajith

Thala Ajith; தக்காளி, வெங்காயம் வெட்ட கற்றுக் கொடுத்தவர் தல: ரோபோ சங்கரின் அஜித் நினைவுகள்! தல அஜித் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், நடிகர் ரோபோ சங்கர் அஜித் தனக்கு தக்காளி, வெங்காயம் வெட்டுவதற்கு கற்றுக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

கரண்டி எப்படி பிடிக்கணும், தக்காளி, வெங்காயம் எப்படி வெட்டனும் என்று சொல்லிக் கொடுத்தவர் அஜித் சார் தான் என்று நடிகர் ரோபோ சங்கர் கூறியுள்ளார்.

அஜித் பிறந்தநாள்

தல அஜித் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். இந்த லாக்டவுனிலும் சும்மா இருக்காத தல ரசிகர்கள் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்கள், நண்பர்கள் என்று பலரும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், காமெடி நடிகர் ரோபோ சங்கர் அஜித் உடன் இணைந்து நடித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். விசுவாசம் படப்பிடிப்பில் நடந்த ஜாலியான தருணங்களை பகிர்ந்துள்ளார்.

அஜித்தின் நல்ல மனசு

எப்போதும் மற்றவர்களை கஷ்டப்படுத்தி பார்க்கக் கூடாது என்று நினைப்பவர் தல அஜித்.

நாம் எப்படி வெள்ளை சட்டை அணிகிறோமோ அந்தளவிற்கு அவரது மனசு வெள்ளையானது. சிறிதளவு கூட மற்றவர்களுக்கு தீங்கு நினைக்க மாட்டார்.

அடுத்தவர்களை தொந்தரவு செய்ய வேண்டும், கஷ்டப்படுத்தி பார்க்க வேண்டும் என்று நினைக்கவே மாட்டார்.

எல்லோருமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு கதாபாத்திரம்தான் தல அஜித்.

குழந்தையாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி உடனடியாக உட்கார்ந்திருக்கும் சேரை விட்டு எழுந்து அவர்களுக்கு மரியாதை கொடுப்பார்.

மேலும், எப்படி இருக்கிறீங்க, வீட்டில் எப்படி இருக்காங்க என்று நலம் விசாரிப்பார். முன்ன, பின்ன யார் எவர் என்றே தெரியாது, தன்னை பார்க்க வரும் அனைவரிடமும் அக்கறையோடு நலம் விசாரிப்பார்.

பவுன்சர்ஸ் இல்லை

பவுன்சர்ஸ் யாரையும் வைத்துக் கொள்ள மாட்டார். வேண்டாம் என்று சொல்வார். எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் அவர் மட்டும் வருவார், அவராகவே சேரை எடுத்து போட்டு உட்காருவார்.

படப்பிடிப்பில் உள்ள அனைவரிடமும் சந்தோஷமாக பேசிவிட்டு, அவர்களுக்கு கை கொடுத்துவிட்டு தான் படப்பிடிப்பில் நடிக்க தொடங்குவார்.

அஜித்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம்

அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. அவரை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் படப்பிடிப்பு முடித்துவிட்டு சுற்றுலா செல்வார்கள். ஆனால், அஜித் மட்டும் தான் படப்பிடிப்பு முடித்த கையோடு ஆபரேசன் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். இதை நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன்.

இரண்டு முட்டியையும் பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்துவிடுவார். அவ்வளவு வலியிருக்கும். ஐஸ் கட்டி வைப்பார். ஆனால், அவரது முகத்தில் ரியாக்‌ஷன் இருக்கும். அந்த வலியை கொஞ்சம் கூட வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்.

கல்யாண் மாஸ்டர் அஜித்துக்கு பிடித்த மாஸ்டர். விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சு தூக்கு பாடலுக்கு அப்படி ஒரு ஆட்டம் போட வச்சுருப்பார்.

எப்பவும் அஜித் ஆடி முடித்ததும் நான் விசில் அடித்து தூள் கிளப்பிடுவேன். அதுக்குப் பிறகு தொடர்ந்து கால் மணி நேரத்திற்கு ஒரே விசில் சத்தமாக இருக்கும். செட்டே அதிரும் அளவிற்கு இருக்கும். அந்த நேரத்தில் அஜித் தனது இரு காதுகளையும் மூடிக் கொண்டு தான் இருப்பார்.

இதைப் பார்த்து ஏன் ரோபோ இப்படி பண்ணுறீங்க என்று என்னிடம் கேட்டார். சார், இதை திரையில் பார்த்து பல கோடி பேரு விசில் அடிக்கப் போறாங்க. அதை நான் முதல் ஆடியன்ஸாக ஃபர்ஸ்ட் நான் தான் லைவாக பார்த்தேன். அப்போ நான் தான் சார் விசில் அடிக்கணும். இங்கு அடிச்சது தான் திரையரங்கிலும் கேட்கிறது என்றேன்.

சண்டைக் காட்சி:

இந்த சீனுக்கு எப்படியும் ஒரு 50 சேரு உடையுது. சார் நான் நடப்பதைத் தான் சொல்கிறேன் என்றேன். அஜித் அகராதியில் முடியாது என்ற வார்த்தையே கிடையாது.

தல Dumb Charades

ஜாலியான ஒரு ஆள். ஜாலி என்றால் ஜாலி அப்படி ஒரு ஜாலி. விஸ்வாசம் படப்பிடிப்பில், தல Dumb Charades விளையாடினார் என்றால் எப்படி இருக்கும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

தல Dumb Charades விளையாடுவதை பக்கத்தில் இருந்து பார்க்கும் பாக்கியம் எனக்கு மட்டும் தான் கிடைத்தது. தல, நயன்தாரா அவங்க எல்லாம் ஒரு டீம், நான் ஒரு டீம்…. கேரவனில் சமைக்க கற்றுக்கொடுத்தார். அவரது பிரியாணியை நான் சாப்பிட்டு இருக்கிறேன்.

பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

நான் உங்களுக்கு பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிறேன். அதை வீட்டில் மனைவி, குழந்தைகளுக்கு சமைத்துக் கொடுத்து வீடியோ எடுத்து என்னிடம் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்றார்.

தக்காளி, வெங்காயம் எப்படி கட் பண்ணனும்?

தக்காளி எப்படி கட் பண்ண வேண்டும், வெங்காயத்தை எப்படி வெட்ட வேண்டும், கரண்டி எப்படி பிடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

அஜித் சொன்னபடி வீட்டில் பெப்பர் சிக்கன் செய்து, வீடியோ எடுத்து அவரிடம் காண்பித்தேன்.

எனது மகள் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அஜித்

என்னுடைய மகள் பிறந்தநாளுக்கு சஸ்பென்சாக அஜித் வாழ்த்து சொன்னார். இதை எனது மகள் எதிர்பார்க்கவில்லை. முதலில் பிறந்தநாள் வாழ்த்து என்று ஆங்கிலத்தில் சொன்னார். அதன் பிறகு யார் பேசுகிறீங்க என்று எனது மகள் கேட்க அஜித் குமார் பேசுகிறேன் என்றார். இதைக் கேட்டவுடன் விசில் அடித்து அப்படியே கத்த ஆரம்பித்துவிட்டார் எனது மகள்.

அப்புறம் நயன்தாரா வாழ்த்து சொன்னாங்க. முழு மதுக்காரனாக மாறிவிட்டேனா ரோபோ ஜி என்று என்னிடம் அமைதியாக கேட்பார்.

ரோபோ சார் என்று கூப்பிட வேண்டாம்

என்னை ரோபோ சார் என்று கூப்பிடுவார். சார் அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க. எனக்கு கை, கால் எல்லாம் நடுங்குது என்று கூறினேன். அதற்கு உங்களை மரியாதையோடு தான் கூப்பிட வேண்டும் என்றார்.

நான் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் மரியாதையோடு தான் கூப்பிடுவார்.

அஜித் விசில்

அஜித் விசில் அடிக்க அடிக்க அவரது முகம் முழுவதும் அப்படியே சிவந்துவிடும். அவர் ஒரு சின்ன குழந்தை மாதிரி. விசில் அடித்துக் கொண்டே இருப்பார்.

அஜித்தை வெளியில் பார்த்தால் தான் சைலன்ட். ஆனால், படப்பிடிப்பில் அப்படியொரு ஜாலி என்று ரோபோ சங்கர் கூறியுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous article01/05/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleபிரபலங்களின் மனதில் இடம் பிடித்த தல அஜித்துக்கு வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here