எங்கிருந்து எவனோ வர்றானாம்: செந்தில் கணேஷ் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்! சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இணைந்து கொரோனாவிற்கு எதிராக விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ். சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து சார்லி சாப்லின் 2 படத்தில் வரும் சின்ன மச்சான் என்னா புள்ள பாடலை பாடியுள்ளனர்.
இதே போன்று, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் வரும் ஒன்னுக்கு ரெண்டா என்ற பாடலையும், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் வரும் இருச்சி பாடலையும், சூரரைப் போற்று படத்தில் வரும் மண்ணுருண்ட பாடலையும் செந்தில் கணேஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல், விழிப்புணர்வு பாடல்களையும், பக்தி பாடல்களையும் மற்றும் பல இசை நிகழ்ச்சிகளிலும் பல பாடல்களையும் பாடியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் என்று பலரும் கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் தங்களது ஸ்டைலில் கொரோனாவுக்கு எதிராக எங்கிருந்து எவனோ வர்றானாம் எல்லாரவையும் வந்து கொல்றானாம்….என்ற விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் பாடலில் கத்தியை தீட்டபுள்ள என்று செந்தில் கணேஷ் பாடல், அதற்கு புத்தியை மட்டும் தீட்டினால் தடுத்துவிடலாம் என்று ராஜலட்சுமி பாடுகிறார்.
வைரஸ் கிருமி கொரோனா….கை கூப்பி வணக்கம் சொல்லி வந்தோம்… ஆனால், கை குலுக்கி கொறஞ்சு போனோம்.. பாரம்பரிய வாழ்க்கையை கடைபிடித்தால் கொரோனாவை விரட்டி அடித்துவிடலாம்..
மேலும், முன்னோர்கள் வகுத்து வைத்த பழக்க வழக்கங்களை பின்பற்றினால், கொரோனாவை தடுத்துவிடலாம் என்றும், மஞ்சள், வேப்பில்லை பயன்படுத்துதல் போன்றவை சிறந்தது என்றும் அவர்களது பாடல் மூலம் உணர்த்தியுள்ளனர்.