Home அறிவியல் ஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை?

ஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை?

780
0
ஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை? ஆரா என்றால் என்ன? பறவை இறப்பது எதனால்? பிஃப்த் போர்ஸ் நெகட்டிவ் எனர்ச்சி

ஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை? ஆரா என்றால் என்ன? பறவை இறப்பது எதனால்? பிஃப்த் போர்ஸ் – நெகட்டிவ் எனர்ச்சி இது உண்மையா? 2.0  படம் சொல்வது என்ன?

ஷங்கர் சொல்லுவதெல்லாம் உண்மை?

2.0 படத்தின் பிரமாண்டத்தை கண்டு இந்திய சினிமாவே மெய்சிலிர்த்துபோய் உள்ளது. அதே நேரத்தில் படத்தை பற்றிய நெகட்டிவ் கருத்துகளும் பேசப்பட்டு வருகின்றது.

பிஃப்த் போர்ஸ் (Fifth Force), ஆரா (Aura), பாசிட்டிவ் நெகட்டிவ், செல்போன் கதிர்வீச்சு இந்த நான்கு விஷயங்களுமே ஒன்றுடன் ஒன்று முரண் பட்டுள்ளது.

2.0 சயின்ஸ் பிக்சன் மற்றும் பேண்டசி திரைப்படம். அதாவது அறிவியல் பூர்வமான கற்பனைக் கதை. உண்மையில் கற்பனைக்கதை. ஆனால் படத்தில் அறிவியல் இல்லை.

ஆரா என்றால் என்ன?

வசீகரன் ஆராவை பற்றி விளக்கும்போது, உடலை சுற்றி ஆவி உள்ள காட்சிகள் இடம்பெறும்.

கிரில்லியன் கேமரா வழியே பார்த்தால், ஆரா தெரியும் எனக் கூறி சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நடந்தது. அந்தக் கேமராவில் பார்க்கும்போது ஒரு மர்ம உருவம் மனித உடலுடன் காணப்பட்டது.

நம் உடலின் வெப்பநிலை, காற்றில் உள்ள ஈரப்பதத்தில் எந்த அளவிற்கு விரிந்து உள்ளதோ? அந்த அளவிற்கு, ஒரு பெரிய உருவம் நம்மை சுற்றி உள்ளது போன்று காணப்படும். அதைத் தான் தவறாக ஆரா எனக்கூறுகின்றனர் என நிரூபிக்கப்பட்டது.

நம் செல்போனில் கூட, பாடி சென்சார் (body sensor) என்ற ஒன்று உள்ளது. நம் வெப்பநிலையை வைத்து நாம் அருகில் உள்ளோமா? இல்லையா? எனக் கண்டறியும். இதைத்தான் சங்கர் ஆரா எனக்கூறி குழப்பிவிட்டுள்ளார்.

பிஃப்த் போர்ஸ்

புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, வலுவான நியூக்ளியர், வலுவிழந்த நியூக்ளியர் இந்த நான்கு விசைகள் புவியில் செயல்படுகிறது. இதற்கு அப்பாற்பட்ட கண்ணிற்குப் புலப்படாத விசையை பிஃப்த் போர்ஸ் எனக்கூறுவார்கள்.

இதன் மூலம் தான் செல்போன் பறக்கிறது. அதாவது பக்ஷிராஜன் ஆவி பறக்க வைக்கிறது. ஆவி எனக்கூறினால் இது ஒரு பேய் படம் எனக்கூறிவிடுவார்கள். அதற்குத்தான் சுற்றிவளைத்து மூக்கை தொட்டுள்ளார் ஷங்கர்.

நெகட்டிவ் எனர்ச்சி

பாசிட்டிவ் நெகட்டிவ் எனர்ஜி. இதில் பாசிட்டிவ் எனர்சியை மட்டும் விண்வெளிக்கு அனுப்புகின்றார்களாம். வேற்றுகிரகத்தில் உள்ள பாசிட்டிவ் வைப்ரேசனை இது அடையாளம் காணுமாம்.

இருப்பதிலேயே பெரும்குழப்பம் இது தான். வேற்றுகிரகத்தில் ஒரு இனம் இருந்தால், அது நம்மைவிட பலம் வாய்ந்ததாக இருக்குமா? அல்லது பலம் குறைந்து இருக்குமா? என ஒரு அய்யம் உள்ளது.

அதையும் மீறி, பூமியைப் பற்றிய தகவல்கள் அடங்கிய வீடியோ காட்சியுடன் ஒரு சேட்டிலைட் எப்பொழுதோ அனுப்பப்பட்டுவிட்டது.

ஒருவேளை வேற்றுகிரகவாசிகள் இருந்தால், அந்த சேட்டிலைட் மூலம் பூமி என்ற ஒரு கோள் இருப்பதை அறிந்துகொள்வார்கள்.

வேற்றுகிரகவாசிகள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பது எப்படித் தெரியும். அதேபோன்று தான் இந்தப் பாசிட்டிவ் நெகட்டிவ் எனர்ஜியும். இரண்டும் ஒரே சமயத்தில் உணரக்கூடிய ஒன்று. தனித்தனியாக இதைப் பிரிப்பது என்பது முடியாத ஒன்று.

செல்போன் கதிர்வீச்சு

செல்போன் கதிர்வீச்சு மூலம் பறவை இறந்துள்ளது. ஆம் என்பதற்கு இதுவரை எவ்வித ஆதாரமும் இல்லை. இல்லை என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை. சமீபத்தில் ஒரு 5G வீடியோ வைரலானது. அது போலி எனப் பின்பு தெரியவந்தது.

அது போன்றுதான் செல்போன் கதிர்வீச்சும். இன்னும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது. இதில் கார்பரேட் குறுக்கிட வேலையில்லை.

ஏதாவது, ஒரு நாட்டிலாவது உண்மை என நிருபிக்கப்பட்டுள்ளதா? என்றால் இல்லை. இருக்கலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது. இதனால் தான் என எங்கும் சொல்லவில்லை.

மேலும் பறவை இறப்பதற்கு கதிர்வீச்சு மட்டுமே காரணம் எனச்சொல்வது மிகப்பெரிய முட்டாள் தனம்.

பறவை இறப்பது எதனால்?

பறவை செல்போன் கோபுரங்கள் மீது மோதி இறக்கின்றது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதாவது, குறைந்த ஒளியில் அல்லது இரவில் பறவைகள், கண் தெரியாமல் செல்போன் கோபுரங்கள் மீது மோதி இறந்துள்ளது.

விமானத்தில் கூட பறவைகள் மோதி இறக்கின்றன. அதனால் தான் விமானத்திற்கு வெள்ளை நிறம் அடிக்கப்படுகின்றது. கண்ணாடி கட்டிடங்களில் கூட மோதி இறக்கின்றன.

மேலும், சிட்டுக்குருவி என்ற இனம் மனிதனோடு, மனிதன் வசிக்கும் வீட்டிலேயே கூடு கட்டி வாழ்ந்த இனம்.

திடிரென மனிதன் அடுக்குமாடி வீடுகளை எழுப்பியதும் குருவிகளின் இருப்பிடம் கேள்விக் குறியாகின்றது?

சிட்டுக்குருவிகள் காடுகளில் வசிக்கும்போது, கழுகு போன்ற பெரிய பறவைகளுக்கு இரையாக வேண்டிய சூழலும் உருவாகின்றது.

மேலும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்த தானியம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் இறந்த புழுக்களை உண்பது கூட ஒருவகை காரணங்களே!

புவி வெப்பமயமாதலை தாக்குப்பிடிக்க முடியாமல் மனிதனே ஊட்டி, சிம்லா என இருப்பிடத்தை மற்ற நினைக்கும்போது, பறவை மட்டும் அதே இடத்தில் வாழுமா?

இந்த உலகில் பறவை ஒன்றே சுதந்திர விலங்கு. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வசிக்கும்.

இயற்கை சீற்றங்களை முன்பே கண்டறிந்து, இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும் குணமும் கொண்டது.

எனவே, 2.0 படம் சொல்லும் அனைத்தையும் நம்ப வேண்டும் என்பது அவசியம் இல்லை. அதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை விளக்கவே இந்தப் பதிவு.

எங்கள் செய்திகளைப்பற்றி கருத்துச்சொல்ல விரும்பினால் கீழே கமெண்ட் செய்யவும். எங்களுடைய வாட்ஸ்ஆப் குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும் Join WhatsApp

Previous articleபெண்களை மயக்கும் வாசனை திரவியம் பற்றிய சீக்ரெட்!
Next articleகதிகலங்கும் மல்லையா: குறிவைத்து காத்திருக்கும் பாஜக!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here