Mersal Audio 400 Million Views; 400 மில்லியன் வியூஸ்களை அள்ளிய மெர்சல்! தளபதி விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படத்தின் ஆல்பம் யூடியூப்பில் 400 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.
மெர்சல் படத்தின் ஆல்பம் யூடியூப்பில் 400 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மெர்சல்.
மெர்சல் படத்தில் விஜய், வெற்றி மாறன், மாறன் மற்றும் வெற்றி என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
வெற்றி மாறன் மல்யுத்த வீரனாகவும், மாறன் டாக்டராகவும், வெற்றி மேஜிக்மேனாகவும் நடித்திருந்தார்.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
ஆதலால், இந்தப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனினும், தடையையும் மீறி மெர்சல் திரைக்கு வந்து ரூ.260 கோடிக்கும் அதிகமாகவே பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்துள்ளது.
இந்த நிலையில், 3 ஆண்டுகளைக் கடந்து மெர்சல் ஆல்பம் யூடியூப்பில் 400 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது.
ஆமாம், படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். அப்போ பாடல்களுக்கு சொல்லவா வேண்டும். ஒவ்வொரு பாடல்களும் யூடியூப்பில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
தற்போது மெர்சல் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு சன் டிவியில், விஜய், சிம்ரன் நடிப்பில் வந்த ப்ரியமானவளே படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பிகில் ஆல்பம் யூடியூப்பில் மட்டும் 300 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. சிங்கப்பெண்ணே பாடல் 93.1 மில்லியன் வியூஸ், இதற்குத்தான் பாடலுக்கு 2.28 மில்லியன், காலமே 3.71 மில்லியன் வியூஸ்,
மாதரே 3.75 மில்லியன், வெறித்தனம் 132 மில்லியன், உனக்காக 38.8 மில்லியன், பிகில் பிகில் பிகிலுமா 40.8 மில்லியன், பிகில் 3.15 மில்லியன் வியூஸ் பெற்று தனித்தனியாகவும், ஆல்பமாகவும் சாதனை படைத்துள்ளது.
இப்படி அடுத்தடுத்து விஜய் நடித்த படங்கள் புதிய சாதனை படைத்து வருகிறது. அண்மையில் கில்லி படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு 17.78 டிஆர்பி ரேட்டிங் பெற்றது. விஜய்தான் டிஆர்பி கிங் என்றும் அழைக்கப்பட்டார்.