Home சினிமா கோலிவுட் Walter: வால்டர் ஸ்னீக் பீக் வெளியீடு!

Walter: வால்டர் ஸ்னீக் பீக் வெளியீடு!

399
0
Walter Sneak Peek

Walter Sneak Peek; வால்டர் ஸ்னீக் பீக் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் வால்டர் (Walter). தற்போது வால்டர் ஸ்னீக் பீக் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் சத்யராஜ். ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தனது மகன் சிபிராஜையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

சிபிராஜ், ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு ஜோர், மண்ணின் மைந்தன், கோவை பிரதர்ஸ், நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் க்ரைம் த்ரில்லர் படமான வால்டர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

வால்டர் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருடன் இணைந்து சார்லி, சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, ஷிரின் காஞ்ச்வாலா, நடராஜன் சுப்பிரமணியம், ரித்விகா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதையடுத்து, தற்போது வால்டர் படத்தின் ஸ்னீக் பீக் (Walter Sneak Peek) வீடியோ வெளியாகியுள்ளது.

வால்டர் ஸ்னீக் பீக் (Walter Sneak Peek)

இதில், சிபிராஜ் மற்றும் சார்லி இருவரும் பேசிக்கொள்கின்றனர். அதில் காணாமல் போகும் குழந்தை திரும்ப கிடைக்கிறது. ஆனால், மறுநாளே அந்த குழந்தை இறக்கிறது,

இது குறித்து எஸ்பியிடம் கூறினாலும், அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. அப்படியே விரக்தியோடு அங்கிருந்து சிபிராஜ் புறப்பட்டுச் செல்கிறார்.

இறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற சிபிராஜ், ஒவ்வொரு குழந்தையும், ஒரு தலைமுறையோடு கனவு என்று டயலாக் பேசுகிறார்.

ஏன் குழந்தை காணாமல் போகிறது? காணாமல் போன உடனேயே குழந்தை கிடைக்கிறது. ஆனால், உடனே இறக்கிறது. இப்படி பல புரியாத புதிர்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனினும் க்ரைம் கதை என்பதால், ரசிகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 13 ஆம் தேதி வால்டர் படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா அப்டேட்; கேரளாவில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு
Next articleஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here