திரௌபதி படம் யாருக்கு லாபம்? விமர்சனம் திரௌபதி ஒரு மேல் ஜாதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பற்றி பேசக்கூடிய படம்.
இது சற்று புதிது. இது படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. படம் எடுக்கும் இயக்குனர்கள் பற்றிய விமர்சனம். அரசியல் செய்யும் கட்சிகளைப் பற்றியது.
Draupathi Movie Review படிக்க கிளிக் செய்யவும்
இதுவரை கீழ் ஜாதியினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை நாங்கள் உலகுக்கு கூறுவோம் என சில இயக்குனர்கள் மார்தட்டிக்கொண்டு படம் எடுத்தனர்.
தற்பொழுதும் எடுத்துக்கொண்டு உள்ளனர். அதேபோன்று மேல் ஜாதி வம்சம் பற்றி தேவர் மகன் படம் தொட்டே வெளிவந்து கொண்டு தான் உள்ளது.
திரௌபதி படத்தில் என்ன சிறப்பு என்றால் கீழ் ஜாதியில் உள்ளவர்கள் எப்படி திட்டமிட்டு மேல் ஜாதி பெண்களை வலையில் சிக்கவைத்து சீர் குலைகின்றனர் என்பதை பற்றிய கதை.
ஜாதி சண்டையில் குளிர் காயும் இயக்குனர்கள்
இதுவரை ஜாதி அரசியலாக்கப்பட்டு மட்டுமே வந்தது. தற்பொழுது ஜாதியை வைத்து சினிமா எடுத்து காசு பார்க்க ஒரு கூட்டம் கிளம்பி உள்ளது.
சுற்றி வளைத்து எல்லாம் நான் கூறவில்லை முத்தையா, மோகன் ஜி, பா.ரஞ்சித் இவர்களைப் போன்றவர்கள் சமூகத்தை சீர் திருத்த மட்டும் படம் எடுக்கவில்லை.
இவர்களைப் போன்று, பல இயக்குனர்களை ஜாதி பற்றி பேசச்சொல்லி தூண்டும் வகையில் படம் எடுக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஒரு படம் ஓடி விட்டால் அதே போன்று பல நூறு குப்பை படங்கள் வெளிவரும்.
திரௌபதி படம் தற்பொழுது இரு தரப்பு ஜாதியினருக்கு இடையே சமூக வலைதளப்போரை உண்டு செய்துள்ளது.
தியேட்டரில் நிச்சயம் கூட்டம் நிரப்பி வழியும். இதனால் யாருக்கு லாபம்? தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கே. மக்களுக்கு? ஜாதி சண்டையில் வெட்டுக்குத்து படுவதே.
நல்லவேளை சமூக வலைத்தளம் என்று ஒன்று உள்ளது. இதில் வெறும் வாய்ப்பேச்சுடன் முடிந்துவிடும்.
இதுவே தெருவில், டீக்கடைகளில் இப்படி ஒரு விவாதம் நடந்தால் என்ன ஆகிருக்கும்? திருமா, ராமதாஸ் போன்றவர்களுக்கு கொண்டமாகியிருக்கும்.
இந்தப் பதிவு ஜாதிக்கு எதிரானது அல்ல. ஜாதியை வைத்து குளிர் காய்பவர்களுக்கு எதிரானது. ஜாதிய கொடுமைகளை நிச்சயம் பேசலாம்?
அதை அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு அரசியலாக்குவதும், மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி காசாக்குவதும் கண்டிக்கத்தக்க ஒன்றே.
முதலியார், செட்டியார், நாயக்கர், நாடார், பிள்ளைமார் இப்படி ஜாதிக்கென தனிக்கட்சிகள் உள்ளது போல், தனித்தனி இயக்குனர்கள் விரைவில் உருவெடுப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
Super arumaiyana padam