ICAI Result 2019 ( icai.nic.in ) : 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த CA இடைநிலை மற்றும் அறக்கட்டளை ( CA Intermediate and CA Foundation ) தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Indian Charted Acoounts of India, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய தேர்வு முடிவுகள், திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வெளியாகலாம் என்று கூறியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை ICAIன் அதிகாரபூர்வமான இணையதளத்தின் ( icai.nic.in ) மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அந்தந்த மாணவர்களுக்கு உண்டான தனித்தனி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் ( REGISTRATION NUMBER ) மூலம் ICAI இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை பெறமுடியுமாம்.
அதுமட்டுமல்லாமல் தங்களின் பிரத்யேக மெயில்ஐடியை ICAI இணையத்தளத்தில் ரிஜிஸ்டர் செய்வதன் மூலமும் தங்களது தேர்வு முடிவுகளை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அப்படி இணையத்தளத்தில் ரிஜிஸ்டர் செய்த நபர்களுக்கு, தேர்வுமுடிவு வெளியாகியவுடனே அவர்களின் இமைலுக்கு தேர்வு முடிவுகள் வந்து சேரும்.
இந்த வழிமுறைகள் மட்டுமல்லாது மொபைல்போனின் மூலமும் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அப்படி மொபைல் SMS மூலம் தேர்வு முடிவுகளை அறிய விரும்புபவர்கள் கீழ்வருமாறு மெசேஜ் டைப் செய்து 57575 என்ற எண்ணிற்கு அனுப்பவேண்டும்.
ICAI Result 2019: For (CA) Intermediate Old Course exam:
CAPICOLD (space) 6 இலக்க பதிவு எண்
For (CA) Intermediate New Course exam:
CAPICNEW (space) 6 இலக்க பதிவு எண்
ICAI Result 2019: For CA Foundation exam
CAFND (space) 6 இலக்க பதிவு எண்
மேற்கண்ட மூன்றில், தங்களின் சரியான தேர்வுக்கான மெசேஜ் முறையை தேர்ந்தெடுத்து, 57575 என்ற எண்ணிற்கு அனுப்பி உடனே உங்களது தேர்வு முடிகளை தெரிந்துகொள்ளலாம்.