India vs Pakistan U19 : உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெற்றுவருகிறது. இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற இந்தியஅணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடவுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை இரண்டு அணிகளுமே தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காலிறுதிச்சுற்றில் இந்தியா எப்படி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முன்னேறியதோ, அதேபோல பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
பொதுவாகவே இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்றால் அதிகமான மக்கள் பார்ப்பார்கள். அதனாலே ஒவ்வொரு வீரருக்கும் இந்த போட்டியில் தன்னுடைய திறமையை நன்றாக வெளிப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும்.
இரண்டு அணியிலும் பல திறமையான வீரர்கள் இருந்தாலும், இந்த அழுத்தமான சூழலில் எப்படி விளையாடுவார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Weather prediction & Pitch report :
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இந்த மேட்ச் தென்னாபிரிக்கா நாட்டில் சென்வேஸ் பார்க்கில் நடைபெறவுள்ளது.
வழக்கமாக இங்கு வெட்பநிலை எப்படி இருக்குமோ அதேபோலத்தான் இன்றும் இருக்கும் என்று கூறப்படுகிறது. வெயில் 32 டிகிரி முதல் 16 டிகிரிக்குள் இருக்கலாம் என்றும், கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் சிறந்த நிலையில் பிட்ச் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
India vs Pakistan U19 : உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி எப்பொழுது துவங்குகிறது?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இந்த அரையிறுதிப்போட்டி, இந்திய நேரப்படி சரியாக 1.30 PM மணிக்கு துவங்கியிருக்கிறது.
இந்த உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியின் நேரலையை எங்கு காணலாம்?
மிகவும் எதிர்பார்ப்புடன் நடக்கவிருக்கும் இந்தப்போட்டியை, STAR SPORTS 3 சேனலில் கண்டுகளிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இந்தப்போட்டியின் நேரலையினை ஆன்லைன் மூலம், HOTSTAR ஆப்பிலும் கண்டுகளிக்கலாம்.
இந்த போட்டியின் ரன்னிங் கமெண்ட்ரி மற்றும் ஸ்கோர் அப்டேட்ஸ்களை CRICBUZZ போன்ற ஆன்லைன் இணையதளங்கள் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.