Home Latest News Tamil LUCID DREAM: கனவுகளை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது?

LUCID DREAM: கனவுகளை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது?

471
0
LUCID DREAM: கனவுகளை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது, கனவு ஏன் வருகிறது, கனவு என்றால் என்ன, தூக்கம் எத்தனை வகைப்படும்,

LUCID DREAM: கனவுகளை எப்படி முழுமையாக ஞாபகம் வைத்துக்கொள்வது? கனவு என்றால் என்ன?  கனவு ஏன் வருகிறது? அதற்கு என்ன அர்த்தம்? தூக்கம் எத்தனை வகைப்படும்?

கனவு என்பது நம் அனைவரின் இரவு உறக்கத்தின்போது வரும் வழக்கமான ஒன்று. ஆனால் காலையில் எழுந்து பார்த்தால் கனவில் நடந்த சிலவிஷயங்கள் மட்டும்தான் நினைவில் இருக்கும்,

ஒரு சிலருக்கு அது கூட இருக்காது. கனவு என்றால் என்ன? கனவு ஏன் வருகிறது? அதற்கு என்ன அர்த்தம்?

முழுக் கனவினையும் எப்படி ஞாபகத்தில் வைப்பது பற்றி சில வழிமுறைகளை இங்கு காணலாம்.

கனவு ( LUCID DREAM ) என்றால் என்ன?

கனவு என்பது இரவு தூக்கத்தின் போது நம் ஆழ்மனம் உண்டாக்கும் படங்கள் மற்றும் கதைகளே. இப்படி உருவாகும் கதைகள் சில சமயங்களில் நல்ல கதையாகவும், ஒரு சில சமயங்களில் நம்மை அச்சுறுத்தும் விதமாகவும் இருக்கின்றன.

இப்படி உருவாகும் கனவுகளை வைத்து நம் ஆள் மனதில் இருக்கும் விஷயங்களை எளிதாக கண்டறிய முடியும் என்கின்றனர் அறிவியல் வல்லுநர்கள்.

கனவு ( LUCID DREAM ) ஏன் வருகிறது?

மனிதர்களுக்கு வெளிமனம், ஆழ்மனம் என மொத்தம் இரண்டு மனங்கள் உண்டு. இதில் அதிகமான நேரங்களில் நம் வெளிமனம் மட்டுமே செயல்படும், தூங்கும்போது மட்டுமே நாம் ஆள் மனதிற்கு செல்கிறோம்.

இன்றைய உலகில் அனைத்து விஷயங்களிலும் நாம், நம் மனம் கூறுவதைக் கேட்டு நடப்பதேயில்லை.

பல சமயங்களில் சூழ்நிலைகளுக்காக நம் மனதிற்கு வேண்டாத செயல்களை நாம் செய்கிறோம்.

இப்படி நாம் செய்யும் வேண்டாத செயல்களினால் ஆள் மனதில் ஏற்படும் மாற்றங்களே கனவாகத் தோன்றுகிறது.

கனவிற்கான அர்த்தம் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள்

மனிதர்களின் பெரும்பாலான குணாதிசயங்கள் அவர்களின் ஆழ்மனதை பொறுத்தே இருக்கும். இப்படியான ஆழ்மன மாற்றங்களைப் பிரதிபலிக்கும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.

உதாரணமாக ஒருவரது கனவு அவரை மிகவும் அச்சுறுத்துமாறு இருந்தால், ஆழ்மனதிற்கு புறம்பாக அவர்கள் செய்த ஏதோ ஒரு காரியத்தினால் அவர்களின் ஆழ்மனம் மிகவும் பயந்துள்ளது என்று அர்த்தம்.

இதன்பின் அவருக்கு முன்பு இருந்த அளவுக்கு மனதைரியம் இருக்காது. இப்படி ஒவ்வொரு கனவின் அர்த்தத்தின் மூலம், அவர்களின் உண்மையான ஆழ்மனதினை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

அதுமட்டுமல்லால் வெளிநாடுகளில் இதற்காக தனி படிப்பே உள்ளது.

தூக்கம் எத்தனை வகைப்படும்?

நமக்கு ஏற்படும் கனவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அதற்குமுன் முதலில் நாம் எப்படி தூங்குகிறோம் என்று அறிய வேண்டும். தினமும் நாம் தூங்கும் தூக்கத்தில் மொத்தம் 5 படிநிலைகள் உள்ளன.

முதல் நிலை: நாம் கண்களை மூடி உறங்க ஆரம்பித்த முதல் 20 நிமிடங்கள் தான் இந்த முதல் நிலை. இந்த நிலையில் நம் உடலில் இருக்கும் தசைகள் மற்றும் கண்களின் செயல்பாடு தளர்வடையத் தொடங்குகிறது.

இரண்டாம் நிலை: இந்த நிலையில் கண்ணின் செயல்பாடு மற்றும் இதயத் துடிப்பு குறைவடையத் தொடங்குகிறது.

நம் உடலில் இருக்கும் வெப்பத்தின் அளவு குறைந்து, நமது மூளை, விழிப்பு மற்றும் தூக்கத்திற்கான நடுநிலையில் இருக்கும். நாம் இந்த நிலையில் 20 முதல் 30 நிமிடம் வரை இருப்போம்.

மூன்றாம் நிலை: இந்த நிலையில் தூங்குபவரை எழுப்புவது என்பது கடினம். இதில் நமது மூளையின் செயல்பாடு முற்றிலுமாகக் குறைந்து, நாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறோம். நாம் தூங்கியதிலிருந்து 35 முதல் 45 நிமிடத்திற்குப் பிறகு இந்த நிலை ஆரம்பமாகிறது.

நான்காம் நிலை: இந்த நிலையில் நம் உடலில் எல்லா பாகங்களும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடும். Slow Wave Sleep ( SWS ) எனப்படும்.

இந்த நிலையில் இருக்கும் யாரையாவது எழுப்பினால், அவர்களுக்கு சிறிது நேரம் தலைவலி, கண் எரிச்சலுடன், உடல் அசதியாகவும் இருக்கும்.

ஐந்தாம் நிலை: இந்த நிலையில் தான் கனவு வருகிறது. வேகமான ரத்த அழுத்தம், கண்கள் வேகமாக நகர்தல், இதயத்துடிப்பு வேகமாதல் போன்ற விஷயங்கள் எல்லாம் இந்த நிலையின் அறிகுறிகள்.

Rapid Eye Movement (REM) எனப்படும் இந்த நிலையானது, நமது மொத்த தூக்கத்தில் 25 சதவீதம் மட்டுமே ஆகும்.

இப்படி நம் தூக்கத்தில் ஐந்தாம் நிலையில் ஏற்படும் கனவினை எளிதாக நியாபகப்படுத்த உதவும் வழிகள் ஏராளம் உள்ளன.

கனவுகளை ( LUCID DREAM ) எப்படி முழுமையாக ஞாபகம் வைத்துக்கொள்வது?

முதலில் நன்றாக உறங்க வேண்டும், ஏனென்றால் நம் உறக்கம் சரியாக இல்லையென்றால் முதல் நான்கு நிலைகளில் அடிக்கடி முழிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அப்படி முழிப்பதனால் நாம் 5 ஆம் நிலைக்கு செல்வது மிக கடினம். எனவே குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும்.

காலை எழுந்தவுடன் வேகமாக படுக்கையிலிருந்து எழுந்திருக்காமல், படுத்தபடியே மெதுவாக கண்களை விழித்து ஏதாவது ஒரு பொருளை மட்டும் பார்த்துக்கொண்டு இரவில் வந்த கனவுவைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இப்படி சிந்திப்பதனால் அவர்களின் எண்ணம் சிதறாமல் கனவைப் பற்றி மட்டுமே யோசிப்பதனால் எளிதாக கனவினை திரும்ப ஞாபகப்படுத்த முடியும்.

கனவிற்காக தினமும் தனியாக ஒரு டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அப்படி எழுதிய டைரியை வாரம் ஒரு முறை திருப்பி பார்த்தால், அந்த வாரத்தில் நாம் நம்முடைய ஆழ்மனதிற்கு எதிராக செய்த காரியங்களினால், ஆழ்மனதில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும்.

தினமும் நாம் தூங்கும் போது மேற்கூறிய 5 நிலைகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும்.

குறிப்பாக நாம் தூங்கியதிலிருந்து 100 நிமிடங்களுக்கு பிறகு, நாம் REM எனப்படும் ஐந்தாம் நிலைக்கு போய்விடுவோம்.

அதற்கு பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் முதல் நிலையில் இருந்து நமது தூக்கம் ஆரம்பிக்கும்.

இதற்கு இடைப்பட்ட வேளையில் நாம் எழுந்து கனவுகளை மீண்டும் ஞாபகப்படுத்த முயற்சித்தால் எளிதாக நினைவில் வருமாம்.

எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் அலாரம் வைத்து எழுந்திரிப்பதன் மூலமும் கனவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியுமாம்.

அலாரத்தின் பாடல் மற்றும் ஒலியினை மென்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் நம் மூளை மெதுவாக விழிப்பு நிலைக்கு வரும்.

மாறாக வேகமான பாடல் ஒலித்தால் நம் மூளை பயந்து போய், நம் மனம் படபடப்புடன் எழுந்திருக்கும். இப்படி எழுந்த பிறகு கனவினை மீண்டும் ஞாபகப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று.

Previous articleIndia vs Pakistan U19 உலகக்கோப்பை இன்று நடைபெறுகிறது
Next articleஇன்றைய ராசிப்பலன்கள் பிப்ரவரி 4, 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here