Home நிகழ்வுகள் இந்தியா யுஜிசி தேசிய தகுதித் தேர்வு (NET) 2020: விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 15

யுஜிசி தேசிய தகுதித் தேர்வு (NET) 2020: விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 15

யுஜிசி தேசிய தகுதித் தேர்வு

தேசியத் தேர்வு முகமை(NTA) ஜூன் 2020க்கான யுஜிசி தேசிய தகுதித் தேர்வு (NET) எழுத விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஜுன் 15 வரை நீட்டித்துள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்பிகாதவர்கள் ஜுன் 15 மாலை 5:30 மணிவரை விண்ணப்பிக்கவும் இரவு 11:50 மணிவரை பணம் செலுத்தவும் அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனாவால் மீண்டும் நீடிப்பு

ஆரம்பத்தில் ஏப்ரல் 16 ஆக இருந்த கடைசி தேதி, கொரோனா ஊரடங்கால் மே 16 வரை நீடிக்கப்பட்டது பிறகு மேலும் நீடிக்கப்பட்டு மே 31 என அறிவிக்கப்பட்டது பிறகு தற்போது ஜுன் 15 வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பை தெரிவித்தார்.

‘துணை பேராசிரியர்’ மற்றும் ‘இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர்’

‘துணை பேராசிரியர்’ மற்றும் ‘இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர்’ ஆகிய பணிகளுக்கான தேர்வை தேசியத் தேர்வு முகமை(NTA) நடத்தி வருகிறது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக பிரித்து நடத்தப்படுகிறது,

ஒவ்வொரு தாளுக்கும் முழு மூன்று மணி நேரம் ஒதுக்கப்பட்டு தேர்வு நடைபெறும். கணிணி அடிப்படையில் இந்த தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மறந்தவர்கள் இந்த வாய்ப்பை மீண்டும் பயண்படுத்திகொள்ளலாம்.

Previous article5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
Next articleதிருச்சி மாநகராட்சியில் உள்ள திருவரங்கத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here