Home நிகழ்வுகள் இந்தியா ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும்

ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும்

345
0
ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும்

ஜூலை 26-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்துள்ளது.

இந்தியா: 2020-ம் ஆண்டிற்கான மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் மானவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 23 முதல் நாடு தழுவிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. மே மாதத்தில் நடைபெறவிருந்த நீட் தேர்வு மற்றும் சிவில் சர்விஸ் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதில் நேற்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து கல்லூரிகள் ஆகஸ்டில் துவங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டர் நேரலையில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நீட் தேர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

‘ஜூலை 26-ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்படும். ஜே.இ.இ முதன்மைத் தேர்வு ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும்.

சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.

2020-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு இதுவரை 15.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜே.இ.இ தேர்வுக்கு 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here