Home நிகழ்வுகள் இந்தியா Ambedkar Jayanti 2020: அம்பேத்கார் ஜெயந்தி 2020 வாழ்த்துகள், கவிதைகள், பொன்மொழிகள்

Ambedkar Jayanti 2020: அம்பேத்கார் ஜெயந்தி 2020 வாழ்த்துகள், கவிதைகள், பொன்மொழிகள்

1103
0
Ambedkar Jayanti 2020 அம்பேத்கார் ஜெயந்தி 2020

Ambedkar Jayanti 2020: அம்பேத்கார் ஜெயந்தி 2020 வாழ்த்துகள், கவிதைகள், பொன்மொழிகள். Ambedkar Jayanti Wishes, Quotes, Messages, Celebration and History.

அண்ணல் அம்பேத்காரை சிறப்பிக்கும் விதமாக நாடு முழுவதும் அம்பேத்கார் ஜெயந்தி  2020 (Ambedkar Jayanti 2020) அவரது பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கார் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காகவும் அவர்களின் வாழ்வை மேம்படுத்தவும் போராடியவர்.

டாக்டர் பாபா சாகேப் என அழைக்கப்படும்  பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த நாளன்று நாட்டின் மூத்த தலைவர்கள் புது டெல்லியில் இருக்கும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர்.

அம்பேத்கார் பொன்மொழிகள் 

தன்னை உயர்ந்த ஜாதியாகவும் மற்றொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும் கருதுபவன் மன நோயாளி. 

பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.

சாதிதான் சமூகம் என்றால் காற்றில் விஷம் பரவட்டும்.

உங்களின் வறுமை உடன் பிறந்தது, தவிர்க்க முடியாதது தீர்க்க முடியாதது என்று எண்ணுவது மடமை ஆகும்.

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதை விட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்வதே சாலச் சிறந்தது.

என்னை கடவுள் ஆக்காதே நீ தோற்று விடுவாய் என்னை ஆயுதமாக மாற்றி போராடு.

இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வை தராத வரை, சட்டம் எத்தகைய விடுதலையை அளித்தாலும் பயனில்லை.

அண்ணல் அம்பேத்காரின் வாழ்க்கை வரலாறும் ஒடுக்கப்பட்டோருக்காக அவரின் போராட்டமும்

ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும் சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருதுமாயின் அது மதமல்ல ஒரு கேலிக்கூத்து.

மனிதனுக்கு மனிதன் சரியான உறவுகள் கொள்வதை தடுக்கின்ற எந்த ஒரு மாதமும் மதமல்ல, அது ஒரு அடக்கு முறையின் அடையாளம்.

வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிப்பான். 

பலி பீடத்தில் வெட்ட பாடுபவை ஆடுகள் தான் சிங்கங்கள் அல்ல, நீங்கள் சிங்கங்களாக இருங்கள். 

கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது.

ஒரு அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்ந்து, பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.

மற்றவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தால் மட்டுமே உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் உனக்கு அந்த பெயர் தேவை இல்லை.

Previous articleபிருத்விராஜின் தங்கையை அஜித் டார்ச்சர் செய்தாரா? அய்யோ இப்படி பழி போடாதீங்க?
Next articleஹிப் ஹாப் ஆதியின் குவாரண்டைன் அண்ட் சில் லிரிக் வீடியோ: யூடியூப்பில் நம்பர் 1 டிரெண்டிங்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here